லாலுவை சிறைக்கு அனுப்பிய அதிகாரி!
புதுடில்லியில் இருக்கும், மனித உரிமை வளர்ச்சிக் கழகத்தின் செயலர் ஆக இருக்கிறார் அமித் கரே என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர் யார் தெரியுமா? 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழலில், லாலு பிரசாத் உட்பட 45 குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பிய, துணிச்சலான அதிகாரி. அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனை தான், இவர்களை சந்தேகப்பட வைத்தது. இதனால், ஆத்திரமடைந்த லாலு, மாவட்ட கலெக்டராக இருந்த இவரை, வேறு துறைகளுக்கு மாற்றினார். லாலுவின் பல தொல்லைகளுக்கு ஆளான போதும், தைரியத்தை கைவிடாமல் செயல்பட்டார். 'என்ன செய்வது... அநியாயம் நடைபெற்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியலயே...' என்கிறார், இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி.-- ஜோல்னா பையன்.