உள்ளூர் செய்திகள்

உலகின் மிகப் பெரிய ஐஸ்கிரீம் பார்லர்!

கரீபியன் தீவு நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ளது, உலகின் மிகப் பெரிய ஐஸ்கிரீம் பார்லர். இங்குள்ளவர்கள், இதை, ஐஸ்கிரீம் பூங்கா என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு பிரமாண்டமாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில், 1,500 பேர் அமர்ந்து, ஐஸ்கிரீமை ருசி பார்க்கலாம். முன்னாள் அதிபரான, மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் உத்தரவின்படி, 1966ல் அமைக்கப்பட்டது, இந்த பார்லர். 'உலகின் மிக ருசியான ஐஸ்கிரீம்களை, குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிட வேண்டும்...' என்ற, பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்காக அமைந்தது தான், இந்த பார்லர். 26 வகையான சுவைகளில், மிக குறைந்த விலையில், இங்கு ஐஸ்கிரீம்கள் கிடைக்கும். பிரமாண்டமான பார்லர் என்றாலும், எப்போதும் இங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும் காண முடியும். ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !