உள்ளூர் செய்திகள்

இந்த பூக்கள் வாடகைக்கு!

சர்வதேச மகளிர் தினம், சமீபத்தில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை மையமாக வைத்து, ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனம், செமத்தியாக கல்லா கட்டியுள்ளது.'மகளிர் தினத்துக்கு பரிசளிப்பதில், உங்கள், 'பாய் பிரண்ட்' கஞ்சத்தனம் காட்டுகிறாரா... எங்களை அணுகுங்கள்...' என்று, அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியிட்டது இந்நிறுவனம்.நூறு ரோஜாப் பூக்கள் அடங்கிய, பிரமாண்டமான, பூங்கொத்துகளை தயாரித்து, 10 நிமிடங்களுக்கு மட்டும் பெண்களுக்கு வாடகைக்கு விட்டது.இதற்காக, கணிசமான தொகை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. போன் செய்து, 'ஆர்டர்' கொடுத்தோருக்கு, 'டோர் டெலிவரி'யும் செய்யப்பட்டது.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !