இதப்படிங்க முதல்ல!
வட்டார தமிழ் பயிலும் கார்த்திகா!அன்னக் கொடியும், கொடி வீரனும் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கார்த்திகா. அதற்காக தேனி வட்டார தமிழ் பேசி நடிக்க இப்போதே முறையான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் கார்த்திகா, 'அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி, என் அம்மா ராதா பெருமை பெற்றது போல், இந்த படம் மூலம் எனக்கும் பெருமை கிடைக்கப் போகிறது...' என்கிறார். மகளே... உன் சமர்த்து!— எலீசா.தயாரிப்பாளர் சங்கத்தின் தடை!பிரபலமான பழைய பட டைட்டில் களை, புதிய படங்களுக்கு வைப்பதற்கு, தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அதே சமயம், அப்படங்களை இயக்கி, தயாரித்தவர்களிடம் முறையான அனுமதி சான்றிதழ் பெற்றால், எந்த தடையும் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஜீவா நடிக்கயிருக்கும், காதலிக்க நேரமில்லை படத்துக்கு, அப்பட டைரக்டரான ஸ்ரீதர் குடும்பத் தாரிடம் அனுமதி கேட்டு வருகின்றனர்.— சினிமா பொன்னையா.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!நண்பன் படத்தை முடித்து விட்ட விஜய், அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக தன் லுக், ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் அனைத்தையும் மாற்றுகிறார் விஜய். 'இது, பெரிய படம் என்பதால், இதன் பிறகே, யோஹன் அத்தியாயம்-1 படத்துக்கு கால்ஷீட் தருவேன்...' என்று கவுதம் மேனனிடம் கூறியுள்ளார்.— சி.பொ.,நடிகை அஞ்சலி படக்கூலி உயர்ந்தது!இன்னும் முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாக வில்லை என்றபோதும், சம்பள விஷயத்தில் முன்னணி நடிகை யாகி வருகிறார் அஞ்சலி. அங்காடித்தெரு படத்துக்கு பிறகு கூட, ஐந்து லட்ச ரூபாய் சம்பளத்திலேயே இருந்த அஞ்சலி, எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு சப்தமில்லாமல் தன் படக்கூலியை, 35 லட்ச ரூபாயாக்கி விட்டார். அந்த வகையில், தற்போது அஞ்சலி நடிக்கும் பல படங்களில், ஹீரோக்களை விட இவருக்கே கூடுதல் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக் கொள்!— எலீசா.மணிரத்னம் படத்தில் கீர்த்தனா!கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா. இவர், இப்போது, மணிரத்னம் இயக்கும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய, அலைபாயுதே போன்று காதல் கதையில் உருவாகிறது. நாயகனாக, கார்த்திக் மகன் கவுதம் அறிமுகமாகிறார்.— சி.பொ.,சில்க் படத்துக்கு எதிர்ப்பு!சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவாகும், 'தி தர்ட்டி பிக்சர்ஸ்' முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால், இந்த நேரத்தில் இதுவரை அப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத சில்க் ஸ்மிதாவின் சகோதரர் நாகவரபிரசாத் என்பவர், இப்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதோடு இப்படியொரு படம் எடுப்பதாக எங்களுக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.— சினிமா பொன்னையா.ஹன்சிகாவுக்கு ரோல் மாடலான நடிகைகள்!வேலாயுதம் படத்துக்குப் பிறகு, ஹன்சிகா மோத்வானியின் நடிப்புக்கு வரவேற்பு கூடியுள்ளது. அதனால், அடுத்தடுத்து வெறும் கவர்ச்சி பொம்மையாக நடிப்பதை விட்டு, திறமையை வெளிப்படுத்த வெயிட்டான வேடம் தேடுகிறார் ஹன்சிகா. மேலும், சிம்ரன், ஜோதிகா போன்ற நடிகைகளை தன் ரோல் மாடலாகக் கொண்டு, அவர்களை போன்று சினிமாவில் புகழ்பெற போவதாகவும் சொல்கிறார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!— எலீசா.கமல் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்!விஸ்வரூபம் படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வரும் கமல், 90 சதவீத படப்பிடிப்பை வெளிநாடுகளிலேயே நடத்துகிறார். இப்படத்துக்காக ஹாலிவுட் டெக்னீஷியன்களை இறக்குமதி செய்த கமல், இப்போது, அங்குள்ள சில பிரபல நடிகர் களையும் முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து வருகிறார்.— சி.பொ.,அவ்ளோதான்!