உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பெற்றோரே உஷார்!சமீபத்தில், நானும், என் கணவரும், உடல் நலமின்றி இருந்த, எங்கள் உறவினர் ஒருவரை நலம் விசாரிக்க, அவர் இல்லத்திற்கு சென்றோம். அவர் வீட்டின் வரவேற்பறையில், அவரது மூன்று வயது மகனுக்கு சொல்லித்தர, ஆங்கில எழுத்துகளின் பட்டியல், அவற்றின் படங்களோடு சுவரில் மாட்டப்பட்டிருந்தது.'ஏ' (ஆங்கில முதல் எழுத்து) பார் ஆப்பிள் எனத் துவங்கிய அந்தப் பட்டியலில், 'பி' பார் பர்கர், 'என்' பார் நூடுல்ஸ், 'பி' பார் பீட்சா என்ற துரித உணவுகளின் பட்டியல், படங்களோடு இருந்ததை பார்த்து அதிர்ந்து விட்டேன்.'பி' பார் பால் - பந்து, 'பி' பார் பென் என்ற காலம் எல்லாம் மாறி, இளம் வயதிலேயே, மிக அதிகமான கொழுப்புச் சத்து மற்றும் சத்துக்களே இல்லாத, வெறும் கலோரிகளை மட்டுமே கொண்டுள்ள, இப்படிப்பட்ட மேற்கத்திய உணவுகளைப் படித்தும், உண்டும் வளரும் குழந்தை, எப்படி ஆரோக்கியமாக வளர முடியும்? சென்ற நூற்றாண்டில், 'ஆட்கொல்லி நோய்களான காலரா, ப்ளேக், காசநோய் போன்றவற்றை ஒழித்துக் கட்டி விட்டோம்...' என்று இறுமாந்திருக்கையில், இந்நூற்றாண்டில் அச்சுறுத்தும் எமன்களாக இளவயதில் உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள், புற்றீசலாய்ப் புறப்பட்டு விட்டன.இவற்றை மருத்துவர்கள், 'வாழ்க்கை முறை மாற்றத்தால் வரும் நோய்கள்' என, அடையாளப்படுத்துகின்றனர். இவ்வேளையில், குழந்தை மனதில் இப்படிப்பட்ட கல்வியை நாமே போதிக்கலாமா? முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியில், 'அ' என்றால் அணில் என்று அச்சிடப்பட்ட புத்தகம் கண்ட பாரதிதாசன், புதுவை கல்வி அதிகாரிக்கே மனு அனுப்பி, 'அ' என்றால், 'அம்மா' என்று மாற்றி எழுத வைத்தார்.இவற்றை எல்லாம் எடுத்துச் சொன்னவுடன், அந்த அட்டையை உடனே கழற்றி விட்டார் எங்கள் உறவினர். பெற்றோரே... மறந்தும் குழந்தைகளுக்கு, இது போன்ற ஆபத்தான அகரவரிசையை சொல்லித் தராதீர்!— முனைவர். சங்கமித்ரா நாகராஜன், கோவை.தனித்துவ கையெழுத்து!ஆசிரியையாகிய நான், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், வாக்குப் பதிவு சாவடி அ<லுவலராக பணியாற்றினேன். பணி முடிந்ததும் சில தாள்களில், நான் கையெழுத்திட நேர்ந்தது. என் கையெழுத்தை பார்த்த, சக< அலுவலர் கைகொட்டி சிரித்தார். 'என்ன மேடம்... கையெழுத்து இது? இனிஷியல் தனியா பெயரின் எழுத்துக்கள் தனித்தனியா. பொம்மை பொம்மையா வரைஞ்சிருக் கீங்க. உங்க கையெழுத்தை ரொம்ப ஈசியா காப்பியடிச்சிரலாம் போல...' என்றார்.அவரே தொடர்ந்து, 'உங்களுக்கு நாப்பது வயசு இருக்கும். பிளஸ் 2 சான்றிதழிலிருந்து பல்வேறு ஆவணங்களில், ஏற்கனவே கையெழுத்து போட்டிருப்பீங்க. இப்ப புதுசா மாத்தினா குழப்பம் வரும். வீட்ல பிள்ளைகள், பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, தனித்துவமா கையெழுத்து போட ஊக்குவிக்கணும். அது, ஒரு இயக்கமா உருவெடுக் கணும்...' என்றார். தலையாட்டி னேன். இப்போதெல்லாம், 10ம் வகுப்பு எடுக்கும்போது, சிறிதுநேரம் ஒதுக்கி, கையெழுத்து போட, பிள்ளைகளுக்கு பயிற்சி கொடுக்கிறேன். உங்கள் குழந்தைகளின் கையெழுத்தை கவனியுங்கள்.— ஸ்ருதிப்ரியா, ஒட்டன்சத்திரம்.மீன்கள் எத்தனை மீன்களடி!என் மகளை பெங்களூரில் பணிபுரியும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தோம். என் மகளுக்கு சுமாராய் சமையல் தெரியும். இருந்தாலும், பிரமாதமாக சமைப்பவள் போல் காட்டிக் கொள்வாள். சமீபத்தில் நா<னும், என் கணவரும் அவளை பார்க்க போயிருந்தோம். எட்டுமாதக் குழந்தையை எங்களிடம் விட்டுவிட்டு டம்பமாய் விரால்மீன் வாங்கச் சென்றாள்.மீன்களை பற்றிய விவரம், என் மகளுக்கு போதாதது என தெரிந்து கொண்ட மீன் வியாபாரி, தேளீ மீனை காட்டி, விரால் மீன் என்றிருக்கிறான். ஒன்றரை கிலோ தேளீ மீனை, விரால் மீன் விலைக்கு வாங்கி தோல் நீக்கி துண்டாடி வீட்டுக்கு கொண்டு வந்தாள். தேளீ கிலோ, 100 ரூபாய், விரால் கிலோ, 300 ரூபாய். 150 ரூபாய் மீனை, 450 ரூபாய்க்கு வாங்கி ஏமாந்திருக்கிறாள். விஷயத்தை கண்டுபிடித்து, மீன்காரனிடம் சண்டை போட்டு, 300 ரூபாயை திரும்ப வாங்கினேன்.திருமணமாவதற்கு முன், மகள்களை மீன்மார்க்கெட்டுக்கு அடிக்கடி கூட்டிச்சென்று, மீன்களின் வகைகளை, அதன் விலைகளை தெரிந்து கொள்ளச் செ#வது நல்லது சகோதரிகளே!— சா.பல்கீஸ் பானு, திருநெல்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !