பெண்களை மாட்ட வைக்கும் கேமரா மொபைல் வீடியோ!
அண்மையில், இன்டர்நெட்டில் கூகுல் தேடலில் பார்வையை ஓட்டியபோது, கேமரா மற்றும் மொபைல் போனை, மறைத்து வைத்து, எடுத்த சில படங்களை காண நேரிட்டது. அப்போது, என் கண்ணில் பட்ட ஒரு படம், என்னை மிகவும் பாதித்தது. அது ஒரு பள்ளி மாணவியும், ஒரு வாலிபனும் சேர்ந்து இருக்கும் வீடியோ படம். அந்த மாணவிக்கு தெரியாமல், கேமராவை மறைத்து வைத்து, அவளுடன் சேர்ந்து இருக்கும் படத்தை எடுத்துள்ளான் அந்தக்கயவன். அச்சிறு பெண்ணின் சீருடையை வைத்துப் பார்க்கும் போது, பள்ளி செல்லும் சிறுமி என்பது உறுதியாகியது.சிறுமிகளே... இளம்பெண்களே... உங்களோடு பள்ளியில் படிக்கும் மாணவனோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ, உங்களை தனி அறைக்கு வரச் சொல்லும் போதே, நீங்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். இது மாதிரியான அழைப்புகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இல்லையெனில், இப்படிப்பட்ட கயவர்களிடம் மாட்டிக் கொண்டால், உங்களுக்குத் தெரியாமல், நண்பர்களுடன் வீடியோவை பகிர்ந்து கொள்ளுதல், இன்டர்நெட்டில் வெளியிடுதல், மிரட்டுதல், பணம் கேட்டு தொல்லை தருதல், போன்றவற்றில் சிக்கி, உங்கள் வாழ்வே சீரழிந்து விடும். காலம் கலிகாலம்... யாரையும் சட்டென நம்பி உங்களை இழந்து விடாதீர் கள் இளம்பெண்களே!
— கே.ஆர்.ராமகிருஷ்ணன், கோவை.'இது' தேவையா?
என்னுடன் கல்லூரி பயின்ற அந்த கருப்பழகி, அனைத்து அம்சங்களும் கச்சிதமாக இருக்க, கட்டழகியாக வலம் வந்தாள். ஆண்களை மட்டுமல்லாது, பெண்களையும் கவரக் கூடிய வகையில், அவளது அழகு இருந்தது.கல்லூரியில் உடன் படித்த ஒருவன், இவளது அழகில் மயங்கி, விரட்டி விரட்டி காதலிக்க, திருமணத்தில் முடிந்தது இவர்கள் காதல்... ஆம்; 'முடிந்தே' விட்டது.அவளது முன்னழகு, பஞ்சு அடைக்கப்பட்ட பிரா அணிந்து, செயற்கையாக, 'மிகைப்படுத்திய' அழகு என்பது, திருமணத்திற்கு பின் தெரிய வரவே, இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அவளது கணவன், சிறு சிறு விஷயத்திற்கெல்லாம் சண்டையிட, ஒரு கட்டத்தில், இருவரும் பிரிந்து, தற்போது, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.கல்லூரி வாழ்க்கையில், 'நமீதா' போல் வலம் வந்து, பல ஆண்களை பைத்தியமாக்கி அழ வைத்த கருப்பழகி, இன்று, கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறாள்... இது தேவையா?போலி கவர்ச்சி காட்ட ஆசைப்படும் இளம் பெண்களே... சற்று யோசியுங்கள்... உங்கள் விபரீத விளையாட்டு, வாழ்க்கையையே வீணாக்கி விடும்.தன் உண்மைத் தன்மையை மறைத்து, இப்படி, '÷ஷா' காட்டி, அவள் வலம் வந்ததால் தானே, வாழ்க்கை வீணானது. திருந்துவரா இவளை போன்ற பெண்கள்?
— ஊர், பெயர் வெளியிட விரும்பாத வாசகி.மணமான ஆண்களுக்கு...
காலை முதல், இரவு வரை வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும் மனைவிக்கு, கணவன், மாதந்தோறும் சம்பளம் வழங்கும் வகையில், புதுச்சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக செய்தித்தாள் மூலம் அறிந்தேன்.கடந்த இருபது ஆண்டு காலமாக, தன் இல்லத்தரசிக்கு மாதம் தவறாமல் அவள் பெயரில் குறிப்பிட்ட தொகையை பேங்கில் டெபாசிட்டாக போட்டு வரும் நண்பரை, எனக்கு நன்கு தெரியும். இதில், இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? ஆண்டு தோறும் இன்கிரிமென்ட்டாக, 'மாதத் தொகை'யைக் கூட்டி, வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறார். சட்ட கட்டாயம் எதுவுமில்லாமல், மனசாட்சி வழி நின்று மனைவியைக் கவுரவிக்கும் அந்த நண்பர், பண்பாட்டின் உச்சத்தைத் தொட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.இதனால், மணமான ஆண்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவெனில், நாளைக்கு சட்டம் நடைமுறைக்கு வந்து இரும்புப் பிடியாய் நம்மை கட்டாயப் படுத்துவதற்கு முன்பே, குடும்ப நலனுக்காக, எதையும் பொருட்படுத்தாது உழைக்கும் தியாக உள்ளம் கொண்ட மனைவிக்கு, மாதந்தோறும் ஒரு சிறப்புத் தொகையை ஊதியமாக அல்ல, ஊக்கத் தொகையாக ஒதுக்க, இன்றே, இப்போதே, தயாராகி விடுங்கள்!—
பி.ஜி.பி.இசக்கி, அகஸ்தியர்பட்டி.