கிளி போல மனைவி இருந்தாலும்...
என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, 'அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், நாளைடைவில் மனம் மாறி, இப்போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு விட்டது. 'அவளை திருமணம் செய்து கொள்ள போகிறேன். சம்மதம் என்றால் வீட்டில் இரு. இல்லையெனில், விவாகரத்து செய்து கொள்வோம்...' என்று மிரட்டும் அளவுக்கு நிலமை முற்றி விட்டது.காதல் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோர் ஆதரவும் இன்றி, வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வேலைக்காரி போல, ஒரே வீட்டில் இருக்கிறாள் தோழி. ஆண்களின் மனம் குரங்கு போன்றது. எனவே, எதைப் பேசினாலும் யோசித்து பேசுங்கள் பெண்களே!—
திவ்யா சுரேந்தர், மதுரை.ரெப்ரெஜிரேட்டரில் வைத்த அப்பளம்!
'நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, நண்பகல் நேரத்தில் சென்றிருந்தேன். அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தனர். நண்பரின் மனைவி, பொரித்துக் கொண்டு வந்து பரிமாறிய அப்பளம், ஒரு குழந்தையின் தட்டில் போடும் போது, உடைந்து விட்டது.'உடைந்த அப்பளம் வேண்டாம். எனக்கு, உடையாத அப்பளம் தான் வேண்டும்...' என்று, குழந்தை அழத் தொடங்கியது. 'முழு அப்பளத்தையா முழுங்கப் போகிறாய்? உடைத்து, உடைத்துத்தானே சாப்பிடப் போகிறாய். அதையே சாப்பிடு...' என்றார் நண்பரின் மனைவி.குழந்தை மறுத்தது. இருவரும் அவரவர் நிலையில் உறுதியாக இருக்க, மனைவிக்காக பரிந்து பேசினார் நண்பர். 'எனக்கு முழு அப்பளம் தான் வேண்டும். நான் முழுசாகவே அதை சாப்பிடுவேன்...' என்றது குழந்தை.அனைவருக்கும் ஆச்சரியம். சரி, என்னதான் நடக்கிறது. எப்படி சாப்பிடப் போகிறது என்ற ஆர்வ மிகுதியால், ஒரு முழு அப்பளத்தைப் பொரித்துக் கொடுக்கச் சொன்னார் நண்பர். அப்பளத்தை கையில் வாங்கிய குழந்தை, அதை எடுத்துச் சென்று, ரெப்ரெஜிரேட்டரின் சில்லர் தட்டில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து வந்தது. இப்போது, அப்பளம் அப்படியே துணி மாதிரி மடிக்கும் பக்குவத்தில் இருந்தது.'இப்ப பாருங்க... முழு அப்பளத்தை எப்படி நான் சாப்பிடுறேன்னு...' என்று சொல்லி, அப்பளத்தை மடித்து, வாய்க்குள் போட்டு, சாப்பிடத் துவங்கியது. நாங்கள் பிரீசரில் வைத்த மாதிரி, உறைந்து @பா@னாம்.
— மு.தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலபுரம்.இன்று பேச மாட்டேன்
என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை எடுத்தான். 'அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். 'நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன். 'கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் இருக்காரு...' என்றான்.இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், 'உயிர் பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.'தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும், இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம், வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.
— பரந்தாமன், செய்யாறு.