இது உங்கள் இடம் !
* திருமண மண்டபம் - உஷார்!சமீபத்தில் உறவினர் ஒருவர், தன் மகள் திருமணத்திற்கு மண்டபம் வாடகைக்கு எடுத்திருந்தார். வாடகை நாளொன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் என்று பேசப்பட்டது. ஆனால், கல்யாணம் முடிந்த பிறகு, மண்டபத்திலிருந்து கொடுக்கப்பட்ட பில் தொகை முன்பு கூறிய வாடகை தொகையை விட, பல மடங்கு அதிகமாக இருந்ததைக் கண்டு, அதிர்ந்து, விவரங்களை அறிய மண்டபத்தின் உரிமையாளரை சந்தித்தார்.அப்போதுதான், மண்டபத்தில் இருந்த, இல்லாத வசதி களுக்கும் சேர்த்து பில் போடப்பட்டிருந்தது தெரிந்தது. சமையல் காஸ் சிலிண்டர் ஒன்று உபயோகித்தாலும், இல்லாவிட்டாலும் 1300 ரூபாய்; ஜெனரேட்டருக்கு 2500 ரூபாய்; மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற கணக்கில் ஆயிரம் யூனிட்டுகள். யூனிட் அளவை எப்படி கணக்கிட்டனர் என்று சொல்ல மறுத்துவிட்டது இன்னொரு அநியா யம். இப்படி, அங்கிருந்த மின்சார விசிறி முதல், தலையணை, குப்பைக் கூடை வரை ஒவ்வொன்றிற்கும் அநியாய வாடகை என்று, பட்டியல் நீண்டு கொண்டே போனது. இம்மாதிரியான செலவு பட்டியல், முன்கூட்டியே விளக்கி சொல்லப் படாதது கண்டிக்கத்தக்கது. கடன் வாங்கி, கல்யாண செலவுகளை செய்பவர்களிடமிருந்து, இரக்கமின்றி பணம் பிடுங்குவது சிறுதும் நியாயமற்ற செயல். இதை ஒரு பகல் கொள்ளை என்று கூட சொல்லலாம். பெற்றோர்களே... திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுப்பதற்கு முன், வாடகையைத் தவிர, மற்ற செலவுகளின் விவரங்களை கேட்டுப் பெற்று, உஷாராவது மிக அவசியம்!— எஸ். ராமன், தி.நகர்.* பயணச்சீட்டு வாங்குவது எதற்காக?கடந்த மாதத்தில் ஒருநாள், மாம்பலம் ரயில்வே நிலைய மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது ரயிலை விட்டு வந்திறங்கி மேம்பாலத்தின் மேல் ஏறிய இரண்டு இளைஞர்கள் டிக்கெட்டை தூர எறிந்தவாறே இவ்வாறு பேசினர்: 'மச்சான்... டிக்கெட் எடுத்தது வேஸ்ட் டா... செக்கிங் வரவே இல்லை. 12 ரூபாய் மிச்சம் பிடித்திருக்கலாம்...' என்று கூறிக்கொண்டு சென்று விட்டனர். இதைக் கேட்ட எனக்கு, அந்த இளைஞர்கள் மேல் பரிதாபம் தான் தோன்றியது. டிக்கெட் எடுப்பது நம் கடமை. அது நாம் ரயிலில் வருவதற்கு கொடுக்க வேண்டிய கட்டணம். செக்கிங் வந்தால் மட்டுமே காட்ட வேண்டிய பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவர்கள், இதை பார்த்தாவது திருந்துவரா? — வே.சிவசுப்ரமணியன், மேற்கு மாம்பலம்.* யாருக்கும் வெட்கமில்லை!சென்னையில் பிரபலமான ஒரு மண்டபத்தில் நடந்த கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். தாலி கட்டியதும், 'பந்தி ரெடி' என குரல் கேட்க, கூட்டம் முண்டியடித்தது. அதில் பெரும் பாலானவர்கள், வசதி படைத்த வர்கள் போல தெரிந்தது; ஆச் சரியமாக இருந்தது. சோத்துக்கே வழியில்லாத பரதேசிகள் போல அடித்து பிடித்து இடம் பிடித்ததைப் பார்த்ததும் அருவருப்பாகி விட்டது. தமிழன் ஒருவேளை பசி பொறுக்க மாட்டானா அல்லது சாப்பாட்டுக்கு அடிமைப் பட்ட வனா? இதைவிட கொடுமை, டைனிங் ஹாலில் முதல் பந்தி நடக்கும்போது, இரண்டாம் பந்திக்கு இடம் பிடிக்க, சாப் பிடுபவரை வேடிக்கை பார்த்த படி நாற்காலிக்கு பின்னால் பெரும் கூட்டமே நின்றது. சாப்பிடு பவர் எப்படி நிம்மதியாக, ருசித்து சாப்பிட இயலும்? கொஞ்சமும் நாகரிகம் தெரியவில்லையே! பந்தி முடிந்த பிறகு பீடா மென்று கொண்டிருந்த உறவினரிடம், இதுகுறித்து வருத்தப்பட்ட போது, அவர், 'சார்... ரொம்ப பேரு வசதியா வாழ்கிறோம் என காட்டிக் கொண்டால்தான் சுற்றமும், நட்பும் மதிக்கும் என்று, தவணை முறையில் பிரிட்ஜ், 'ஏசி', 'டிவி', பைக் என வாங்கி விடுகின்றனர். வாங்குகிற சம்பளத்தை மொத்தமாக அதற்காக தவணை கட்டி விடுகின்றனர். அதனால், தினச் சாப்பாடு வெறும் தண்ணீர் சோறும், கடையில் விற்கும் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டும் தான். அதனால், ஓசி சோறு எங்கு கிடைத்தாலும், வெட்கமில்லா மல் அடித்துக் கொள்கின்றனர். நீங்கள் அவர்களது ஒரு கிராம் கவரிங் நகைகளையும், தவணை யில் வாங்கிய புடவை, சபாரி சூட்டையும் பார்த்து வசதியான வர்களாக நினைத்து ஏமாந்து விட்டீர்கள்!' என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அந்த உறவினர் சொன்னது உண்மைதானோ! வயிற்றுக்கு வஞ்சகம் செய்து, தவணையில் பிரிட்ஜ், 'டிவி' வாங்கி வைத்து, போலி கவுரவம் தேடுவதில் என்ன பெருமை இருக்கு. இந்த கபட நாடகம், வாழ்க்கையை பாதிக்கும் ஆபத்தாகும் என்பது பட்டால் தான் புத்தி வருமோ?— அ.யாழினி பர்வதம், சென்னை.நண்பரின் சூப்பர் அணுகுமுறை!கோவிலில், குருக்களாக இருக்கும் என் நண் பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அங்கு முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ணோடு வயதான பெற்றோரும் வந்தனர். வந்தவர்கள், 'எங்கள் பெண்ணுக்கு ஜாதகத்தில் திருமண நேரமே கூடி வர வில்லை. எவ்வளவு காலத்திற்கு இப்படியே எங்கள் பெண்ணை வைத்திருப்பது? பூ கட்டிப் போடுங்கள்... சாமி நல்ல உத்தரவு கொடுத்தால் ஜாதகம் பார்க்காமல், திருமணத்தை முடித்து விடுகிறோம்!' என்றனர். உடனே என் குருக்கள் நண்பரும், அப்படியே செய் தார். திருமணம் செய்யலாம் என சீட்டு வந்தது. அவர்கள் சந்தோஷமாகச் சென்றனர். என் நண்பர் என்னிடம், 'ஏற் கனவே பெண்ணுக்கு முப்பது வயதாகி விட்டது. ஜாதகத்தை அவர்கள் முழுதாய் நம்புகின்றனர். சீட்டு போட்டதில், எதிர் மறையான பலன் வந்திருந்தால், 'திருமணமே நடக்காதோ...' என சோர்ந்து போய்விடுவர். அதனால், இரண்டு சீட்டிலும் நல்ல பலன் தரும் படியாக குங்குமத்தையே வைத்து மடித் தேன்...' என்று சொல்லி வியக்க வைத்தார். நண்பரின் இந்த பாசிடிவ் அணுகுமுறைக்கு, சபாஷ் போட்டு விட்டு வந்தேன்.— த.மாஸ்கோ ராணி, அறந்தாங்கி.