குண்டர்கள் வாடகைக்கு!
கிழக்காசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த, 'டெபுக்கான்' என்ற நிறுவனம், அதிக எடை உடைய குண்டர்களை, வேலைக்கு அமர்த்தி, வாடகைக்கு விடுகிறது. ஒரு மணி நேரத்துக்கு, 1,500 ரூபாய் வாடகை. குண்டர்கள் என்றதும், அடியாட்கள் என, நினைத்து விட வேண்டாம்; இவர்கள் சிரிப்பு குண்டர்கள். திருமணம், பிறந்த நாள், ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக, பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளை செய்வது தான், குண்டர்களின் வேலை. இதற்காக, 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள ஏராளமான குண்டர்களை, அந்த நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது. சமீபகாலமாக, இந்த சிரிப்பு குண்டர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஜப்பானில் கடும் கிராக்கி நிலவுகிறது.— ஜோல்னாபையன்.