உள்ளூர் செய்திகள்

சுற்றுலா பயணிகளே வராதீர்!

எல்லா நாடுகளுமே, சுற்றுலா பயணிகளை, சந்தோஷத்துடன் வரவேற்கும்; ஆனால், அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்திலுள்ள, இனுப்பியா என்ற கிராம மக்கள் மட்டும், சுற்றுலா பயணிகளை, 'வராதீங்க; போயிடுங்க...' என்று, சொல்கின்றனர். காரணம், சுற்றுலா பயணிகள் மீதுள்ள கோபத்தால் அல்ல; வால்ரஸ் என்ற உயிரினத்தின் மீது கொண்ட அக்கறை தான்!அலாஸ்காவின், வடமேற்கு கடற்கரையில், பாயின்ட் லே பிரதேசத்தில் உள்ள கிராமம், இனுப்பியா. இங்கு, 270 பேர் குடியிருக்கின்றனர். கடலில் உள்ள பனிக்கட்டிகள் கரைந்து வருவதால், வால்ரஸ்கள் கூட்டமாக கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. வாரத்திற்கு, ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட வால்ரஸ்கள் கிராமத்துக்குள் வருவதால், இதை காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கோ, உணவு அருந்துவதற்கோ விடுதிகள் ஏதும் கிடையாது என்பதுடன், இக்கிராம மக்களின் முக்கிய உணவே, வால்ரஸ்கள் தான்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !