டுவிட்டர், பேஸ்புக கை வெறுக்கும் இயக்குனர்!
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை உருவாக்கி, 'இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா...' என, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர்.நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர். ஆனால், இவருக்கு, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்கள் அறவே பிடிக்காதாம்; அவற்றை பயன்படுத்தவும் மாட்டாராம். இதுகுறித்து, அவர் கூறுகையில்,'தொழில் நுட்பங்களை நமக்கு அடிமையாக்க வேண்டுமே தவிர, நாம், அதற்கு அடிமையாக கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்பதற்காகவே மனிதராக பிறந்துள்ளோம். அதை இப்படி சமூக வலை தளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதை விட, மனிதனாக பிறக்காமலேயே இருந்திருக்கலாம்...' என, காட்டமாக கூறுகிறார்.— ஜோல்னாபையன்.