வித்தியாசமான அணிவகுப்பு!
கடுமையான இயற்கை சூழ்நிலையிலும், நெருக்கடியான நேரத்திலும், நாட்டையும், மக்களையும் காப்பாற்றும் ராணுவத்தினர் மீது எல்லா நாடுகளிலும், மிகப்பெரிய மரியாதை இருக்கும். உலக போர்களில் உயிர் இழந்த ராணுவ வீரர்களை நினைவுப்படுத்தும் விதத்தில் ஊர்வலங்களும் நடைபெறுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 25 அன்று, ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்துவது வழக்கம். இதில், ராணுவத்தினர் பயன்படுத்தும் அரிய வாகனங்கள் மற்றும் விலங்குகளை சாலையில் அழைத்து சென்று, மக்களை உற்சாகப்படுத்துவர். இதனால், மக்கள் மத்தியில் ராணுவத்தினர் மீது மரியாதை அதிகரிக்கும் என்கின்றனர். — ஜோல்னாபையன்