வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சூப்பர் அட்வைஸ் . இந்த அட்வைஸ் கேட்டு நடந்தால் இந்தியா வந்தாலும் நிம்மதியா இருக்கலாம்.
பெரிய பேப்பரில், நீங்கள் தாய்நாடு திரும்பினால் பிளஸ் என்ன மைனஸ் என்ன, அரபு நாட்டிலேயே இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்தால்பிளஸ் என்ன மைனஸ் என்ன என்று நிதானமாக பாயிண்ட் பாயிண்ட் ஆக பட்டியல் இடுங்கள். ஒரு வாரம் பத்து நாள் அல்லது ஒரு மாசம் எடுத்தாலும் பரவாயில்லை, திரும்ப திரும்ப படித்து பார்த்து அப்புறம் எது நல்லது என்று யோசியுங்கள். நெருங்கிய நண்பர்கள் இருந்தால் எழுதியதை காட்டி ஆலோசியுங்கள். முக்கியமாக உங்களுக்கு தெரிந்து யாராவது ஏற்கனவே இந்தியா திரும்பி இருந்தால் அவர்களது அனுபவத்தை கேளுங்கள். தேவைப்பட்டால் Google Gemini உடன் தமிழில் உரையாடலாம் [Phone போதும்] . இன்னும் கொஞ்சம் நல்ல தெளிவு கிடைக்கலாம். தாய்நாடு திரும்புவதாக இருந்தால், 18 மணிநேரம் இனிமேல் வேலை பார்க்க முடியவில்லை. உடம்பு முடியவில்லை என்று அம்மாவிடம் திரும்ப திரும்ப கொஞ்சநாள் சொல்லுங்கள். அதோடு குழந்தையை பிரிந்து இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லுங்கள். மனைவி கூட இன்னும் கொஞ்ச வருஷம் இருந்து விட்டு வந்தால் குழந்தை படிப்புக்கு நல்லது என்று சொல்கிறாள் ஆனால் என்னால் முடியவில்லை என்று மனைவி மேல் பழி விழாமல் திரும்பி வாருங்கள். கடைசியாக, மற்றவர்கள் ஐடியா சொல்கிறார்கள் என்பதாக இல்லாமல் உங்கள் முடிவாக வாருங்கள்.
உண்மைதான் ஐயா
உங்கள் மனைவி சொல்வதை கேளுங்கள்.
நிறைய அம்மாக்கள் சொல்லுவது இதுதான். பெண்கள் நிறைய விஷயங்களை பொறுத்து போய் பொறுத்து போய் அவர்கள் மற்றவர்களையும் அப்படியே எதிர் பார்ப்பார்கள். இந்த அம்மா சொல்லும் தேவைகள் என்றும் முடியாது. திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பின், இந்த ஆணின் கடமை ஒரு குடும்ப தலைவன் கடமை. மரியாதையாக ஊருக்கு திரும்பி தன் குடும்பத்தை நடத்தும் வழி பார்க்கவேண்டும். அது என்ன அம்மா மனம் கஷ்டப்படும் மனைவி மனம் கோணும் என்கிற சாக்கு? உங்களுக்கு என்று மூளை இல்லை? சகுந்தலா மேடம் சொல்லும் வழி சரியான வழிதான்.
இது ஒருத்தர் கொடுக்கக்கூடிய மிக மோசமான கேவலமான அறிவுரை. அவங்க வருஷத்துக்கு ரெண்டு தடவைதான் வரச்சொல்லி கேட்டாங்க, அப்புறம் எதுக்காக அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்? இந்த அம்மாவோட அட்வைஸ் கேவலமா இருக்கு. இந்த வேலைக்கு இவங்க தகுதியானவங்க இல்ல. இந்த பகுதிக்கு ஆளை மாத்தணும்