வாசகர்கள் கருத்துகள் ( 1 )
R Hariharan
டிச 28, 2025 10:24
சிலர் பெங்களூரில் 20கு பதிலாக 30 அல்லது 40 ருபேஸ் வாங்குகிறார்கள். கேட்டல் பபேருடன் வாங்கினால் 20 தனியாக வாங்கினால் 30 அல்லது 40.
ஜி.விஜயகுமார், கோவை: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' தாரக மந்திரம், 'திராவிட மாடல்' ஆட்சியில் எப்படி உள்ளது? வெறும் வார்த்தை அளவில், 'கடமைக்காக' மேடைகளில் முழங்கப்படுகிறது!ஆர்.பிரதீபன், சென்னை: பயிர்களுக்கு, ரசாயன உரம் கெடுதல் என்றால், மனிதனுக்கு... ரசாயன உரம் போட்டு வளர்க்கப்பட்ட விவசாய விளை பொருட்களை உண்பது கெடுதல். இதற்காக தான், சமீபத்தில் கோவை வந்த பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் குறித்து, மிகவும் வலியுறுத்திப் பேசினார்! * சிவராம சுப்ரமணியன், நெல்லை: தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு, கட்சியின் துணைப் பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., தலைமையிலான குழுவிடம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி... தி.மு.க., கனிமொழியின் தேர்தல் அறிக்கையைப் படிக்க, நானும் வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். குறிப்பாக, 'டாஸ்மாக்' பற்றி, கனிமொழி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, தாய்க்குலங்களிடம் அதிகமாக உள்ளதாக அறிகிறேன்.மு.நாகூர், ராமநாதபுரம்: 'மொபைல் போன் பார்ப்பதை குறைத்து விட்டு, பிடித்த விளையாட்டை விளையாடுங்கள்...' என, துணை முதல்வர் உதயநிதி, மாணவர்களை கேட்டுக் கொண்டுள்ளாரே... மிக நல்ல அறிவுரை. விளையாட்டுத் துறை அமைச்சருமான துணை முதல்வர், உதயநிதி கூறுவது முற்றிலும் சரி! மாணவர்கள், மைதானங்களில் சென்று ஓடியாடி விளையாடுவது மிகவும் அரிதாகி விட்டது. எல்லா விளையாட்டுகளையும் மொபைல் போனில் தான் விளையாடுகின்றனர். அது, அவர்களது உடல்நலத்துக்கு கேடானது என்பதை அழகாக உணர்த்தி விட்டார்! ஜி.அர்ஜுனன், திருப்பூர்: மது ஒழிப்பு நடைபயணத்தை தொடங்கி வைக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க., தலைவர் வைகோ, நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறாரே... சரியான தமாஷ்! திருடனிடமே சாவியை கொடுத்த கதை தான் இது! வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான நாடகங்களில் இதுவும் ஒன்று! வி.கவுதம சித்தார்த், விழுப்புரம்: 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித் தருவதே, தி.மு.க.,வின் முதல் கொள்கை...' என்கிறாரே, அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி., ஜெகத்ரட்சகன்? தி.மு.க., ஜெகத்ரட்சகனின் பார்வை இப்போது, புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது. அங்கு அவர், பல முதலீடுகளை செய்துள்ளாராம். எப்படியாவது, புதுச்சேரி முதல்வராகி விட வேண்டும் என்பதே, அவரது இலக்காக இருக்கிறது. கட்சி தலைமையும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. அதை நேரடியாக சொல்லாமல், இப்படி ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்! * எம்.ராஜேந்திரன், லால்குடி: 'ஒன்பது கோடி ரூபாய் செலுத்தினால், அமெரிக்க குடியுரிமை பெறலாம்...' என்று, அந்நாட்டு அதிபர், ட்ரம்ப் அறிவித்துள்ளாரே... ஒரு அந்நிய நாட்டு குடியுரிமை பெற, ஒன்பது கோடி ரூபாய் செலவழிப்பதை விட, அந்த தொகையில், தம் சொந்த மண்ணில், ஒரு புதிய தொழிற்சாலையிலோ, விளை நிலங்களிலோ முதலீடு செய்து, தாமும் வளர்ந்து, பிறரையும் வளர்த்து விடலாம் இன்றைய இளைஞர்கள்! அமுதா அசோகராஜா, அரவக்குறிச்சிப்பட்டி: 'தினமலர்' காலண்டருக்கு, வாசகர்களின் வரவேற்பு, ஆண்டுதோறும் எப்படி உள்ளது? அமோக வரவேற்பு! அடுத்த ஆண்டுக்கான காலண்டர் பிரதிகள், பல லட்சங்கள் அச்சடித்தும், எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டன; மீண்டும் அச்சடித்து விற்பனை செய்தார், எங்கள் விற்பனை பிரிவு பொதுமேலாளர் ஸ்ரீனிவாசன் என்ற அனிஷ்!
சிலர் பெங்களூரில் 20கு பதிலாக 30 அல்லது 40 ருபேஸ் வாங்குகிறார்கள். கேட்டல் பபேருடன் வாங்கினால் 20 தனியாக வாங்கினால் 30 அல்லது 40.