சாக்கே சாராயம்!
படத்தில் காணப்படும் அழகான பெட்டிக்குள் இருப்பது என்ன தெரியுமா? நாட்டு சாராயம் என்றால் நம்ப முடிகிறதா?ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து, 500 கி.மீ., வடக்கு திசையில் பயணித்தால், சாக்காட்டா என்ற நகருக்கு செல்லலாம். இங்கு தயாரிக்கப்படும் சாராயத்துக்கு 'சாக்கே' என்று பெயர். ஜப்பானியர் மிகவும் விரும்பி குடிக்கும் மதுபானம், 'சாக்கே சாராயம்' தான்.'இந்த சாராயத்துக்கு ஈடு இணையே இல்லை...' என்கின்றனர், ஜப்பான் குடிமகன்கள். — ஜோல்னாபையன்