உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அட்லியின் அடுத்த திட்டம்!ஷாருக்கான் நடித்த, ஜவான் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கலக்கிய, இயக்குனர் அட்லி, தற்போது தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும், ராக்கா என்ற தெலுங்கு பட வேலைகளில், 'பிசி'யாக இருக்கிறார்.இதற்கிடையே, ஜவான் மற்றும் ராக்கா படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்க இருக்கிறார். இவை இரண்டையும் முதல் பாகங்களை விட, மிரட்டலான, 'பட்ஜெட்'டில், 'ஹாலிவுட், டெக்னாலஜி'யில் பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார், அட்லி.— சினிமா பொன்னையாஹைதராபாத்திற்கு மூட்டை கட்டிய, பூஜா ஹெக்டே!தமிழில், முகமூடி படத்தில் அறிமுகமாகி, பிறகு தெலுங்கில், 'நம்பர்- ஒன்' நடிகையாக வலம் வந்த, பூஜா ஹெக்டே, விஜயின், பீஸ்ட் தமிழ் படத்தின் மூலம், மீண்டும் தமிழில், 'ரீ--என்ட்ரி' கொடுத்தார். ஆனால், அதன் பிறகு, கதாநாயகியாக நடிக்க , தமிழ் படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.இதனால், வேறு வழியின்றி மீண்டும் தெலுங்கு சினிமாவில் தஞ்சம் அடைந்துள்ள பூஜா, தன் சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்து, புதிய பட வேட்டையில் இறங்கியுள்ளார். அதோடு, 'டூ-பீஸ்' நீச்சலுடை, கலாசாரத்தையும் அதிரடியாக கையில் எடுத்து, தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.— எலீசாஇடத்தை பறிகொடுத்த, கீர்த்தி ஷெட்டி!தெலுங்கிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து, எப்படியாவது, 'நம்பர் ஒன்' நாற்காலியை பிடித்து விட வேண்டும் என்று கனவு கண்ட, கீர்த்தி ஷெட்டியின் படங்கள் வரிசையாக, 'பிளாப்' ஆகின. இதனால், கடுப்பாகி மீண்டும் தெலுங்குக்கே ஓடினார்.ஆனால், அங்கே அவருக்கு பெரிய அதிர்ச்சி. அவர் விட்டுச் சென்ற இடத்தையும், ஆஸ்தான இயக்குனர்களையும், ஸ்ரீலீலா மற்றும் பாக்யஸ்ரீ போன்ற நடிகையர் கவ்விப்பிடித்துக் கொண்டனர். அதனால், இப்போது கைவசம் பெரிய படங்கள் இல்லாமல் தவித்து வருகிறார், கீர்த்தி ஷெட்டி.—எலீசாயுவன் வெறியன், ஜேசன் சஞ்சய்!சிக்மா தமிழ் படத்தின் இயக்குனராக களமிறங்கியுள்ள, விஜயின் மகன், ஜேசன் சஞ்சய், இசையமைப்பாளர், யுவன் சங்கர் ராஜாவின் வெறித்தனமான ரசிகராம். 'யுவன் படம் போட்ட, 'டீ--ஷர்ட்' அணிவது முதல், அவரது பாடல்களைக் கேட்டு ரசிப்பது வரை, அவரது மிகப்பெரிய ரசிகன் நான்...' என்கிறார், ஜேசன் சஞ்சய். அதனால், தன் முதல் படத்திற்கு, யுவன் இசையமைக்காவிட்டாலும், அவரை ஒரு பாடலை பாட வைத்து ஆசையை தீர்த்துக் கொண்டதாக சொல்கிறார்.— சி.பொ.,நயன்தாராவின், 'மாஸ்டர் பிளான்!'தன், 41வது வயதிலும், முன்னணி நடிகையாக வலம் வரும், நயன்தாரா, இப்போது வெறுமனே கதாநாயகியாக மட்டும் நடித்து, திருப்தியடைவதில்லை. கன்னட நடிகர், யஷ்ஷுடன், டாக்ஸிக் பல மொழி படம் மற்றும் ஹிந்தி நடிகர் சல்மான்கானுடன் நடிக்கும் ஹிந்தி படத்திலும் அழுத்தமான கேரக்டர்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.அதுமட்டுமா? இனி தான் நடிக்கும் தமிழ் படங்களை, 'தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும், 'டப்பிங்' செய்து, 'ரிலீஸ்' செய்ய வேண்டும்...' என்று தயாரிப்பாளர்களிடம் கறாராக, 'கண்டிஷன்' போட்டு வருகிறார், நயன்தாரா.— சினிமா பொன்னையாகருப்பு பூனை...'சட்டைப் பை' என பொருள் படும் படத்தில் நடித்து வரும் தங்கலான் பட நடிகை அடிக்கடி மாலத்தீவுக்கு, 'சீக்ரெட் விசிட்' அடிப்பதன் பின்னணியில் ஒரு பெரிய, 'அட்ஜஸ்ட்மென்ட் மேட்டர்' இருக்கிறதாம். வெளிநாட்டிலிருந்து வரும் வி.ஐ.பி., கஸ்டமர்களை, 'அட்டெண்ட்' பண்ணி லட்சம் லட்சமாக கல்லா கட்டுகிறார், நடிகை. சினிமாவில் தன்னால் எதிர்பார்த்தபடி சம்பாதிக்க முடியாததால் இந்த ரகசிய, 'ரூட்'டை கையில் எடுத்திருக்கும், அம்மணி, முன்பெல்லாம் ஓரிரு நாட்கள் மட்டுமே, 'டேரா' போட்டவர், இப்போது மாலத்தீவில் மாதக்கணக்கில் முகாமிடுவதாகவும் கூறுகின்றனர்.பாகுபலி வில்லனுடன் காதல் வளர்த்து வந்த, மூனுஷா நடிகை பின்னர் அவரை கழட்டி விட்டார். என்றாலும், தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு, அம்மணி, 'விசிட்' அடிக்கும் போது, பழைய பழக்கத்தில் மீண்டும் அம்மணியை நெருங்கி வருகிறார், பழைய காதலர். இப்படி அவர் மீண்டும் நெருங்கத் தொடங்கி இருப்பதால், நடிகைக்கு புதிய வாய்ப்புகள் கொடுப்பதற்கு யாரும் முன் வருவதில்லை. இதன் காரணமாக வில்லனுக்கு தடுப்புச் சுவர் எழுப்பி இருக்கும், மூனுஷா நடிகை, சமீபகாலமாக தான், 'டோலிவுட்'டுக்கு செல்லும் விஷயம் வௌியில் தெரியாமல், ரகசியமாக சென்று வருகிறார்.சினி துளிகள்!* ரஜினியின், தர்மன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறுகிறார், சிம்ரன்.* சர்தார்-2 படத்தை அடுத்து, தற்போது, விஜய் சேதுபதியுடன், பாக்கெட் நாவல் படத்தில் நடித்து வருகிறார், மாளவிகா மோகனன்.* த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருக்கும் புதிய படம், தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளில் உருவாகிறது.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !