உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

அஜித் போட்ட தடை உத்தரவு!அஜித் நடித்து கடந்த ஆண்டு வெளியான, குட் பேட் அக்லி படத்தில், இசையமைப்பாளர், இளையராஜாவின் பழைய பாடல் பயன்படுத்தப்பட்டதால், 'காப்பி ரைட்' சிக்கல் ஏற்பட்டது. அதனால், ஓராண்டாக அப்படத்தின் ஓ.டி.டி., உரிமையை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, தான் நடிக்க இருக்கும் புதிய படத்தின் இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, அதுபோன்ற பழைய படத்தின் பாடல் எதையும் பயன்படுத்தக்கூடாது, என்று தடை உத்தரவு போட்டுள்ளார், அஜித் குமார்.— சினிமா பொன்னையாதடை போடாத, கீர்த்தி சுரேஷ்!திருமணத்திற்கு பின், பிசியாக நடித்து வரும், கீர்த்தி சுரேஷ், படுக்கையறை மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பதற்கு தடை போடுவதில்லை. இது குறித்து, அவர் கூறுகையில், 'கதைக்கு அவசியமென்று, இயக்குனர்கள் சொல்லும்போது, அதைத் தவிர்க்க முடிவதில்லை. அதோடு, நான் நடிக்கும் கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காட்சிகளுக்கு தடை போடுவதில்லை. இருப்பினும், இதைக் காரணம் காட்டி, 'லிமிட்'டை தாண்ட மாட்டேன். என், 'இமேஜை' பாதிக்காத வகையில், 'செக்போஸ்ட்' வைத்துதான் நடிப்பேன்...' என்கிறார்.— எலீசாவித்யாபாலனுக்கு குவியும், வில்லி வேடங்கள்!'பாலிவுட்' எனப்படும் ஹிந்தி படவுலகில், முன்னணி நடிகையரில் ஒருவர், வித்யாபாலன். இவர், சமீபத்தில் வெளியான, ஜெயிலர் 2 பல மொழி படத்தில், ரஜினியின் முன், 'சிகரெட்' பிடித்து, அவர் முகத்தில் புகையை ஊதும் அதிரடி வில்லி வேடத்தில் நடித்திருந்தார். இந்த வேடம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால், தற்போது பல வில்லி வாய்ப்புகள், வித்யாபாலனை தேடி வரத் தொடங்கியுள்ளன. அடுத்தபடியாக, அவர் இந்திய அளவில் அதிரடி வில்லி வேடத்தில் நடிக்கலாமா என்ற யோசனையில் உள்ளார்.— எலீசாகருப்புப் பூனை!நீண்ட இடைவெளிக்கு பின், உச்ச நடிகரும், உலக நடிகரும் இணைந்து நடிக்க உள்ளனர். ஆனால், அவர்கள் நடிக்கும் படத்தை, 'மெகா பட்ஜெட்'டில் தான் தயாரிக்க வேண்டியிருக்கும். அப்படி தயாரிக்கும் பட்சத்தில், இப்படத்தை அதிகப்படியான விலைக்கு விற்றால் தான், போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற சூழல் உள்ளது.இதனால், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய காரணத்தால், இப்படத்தைத் தயாரிக்கவிருந்த, முந்தைய ஆட்சியாளரின் பட நிறுவனம் பின்வாங்கியுள்ளது. இதனால், இப்படத்தைத் தயாரிக்க, புதிய நிறுவனங்களுடன் இரண்டு மெகா நடிகர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.சினி துளிகள்* ஜெயிலர் -2 படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினியும், கமலும் நடிக்கும் படத்தை, இயக்குனர், நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.* லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை அடுத்து, தற்போது இயக்குனர், ஷங்கரின் மகன், அர்ஜித் ஷங்கர் நடிக்கும், லவ்வர் பாய் என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார், கிருத்தி ஷெட்டி.அவ்ளோதான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !