எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு!
மறைந்த பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, பிரபலமாக இருந்த போது மலையாள நடிகர், பகத்பாசிலின் தந்தையும், இயக்குனருமான பாசில் இயக்கிய, என்டெ மாமாட்டிக்குட்டி அம்மைக்கு என்ற மலையாள படத்தில் பாட வேண்டியிருந்தது. ஆனால், வேலை பளுவால் அவரால், பாடல் பதிவின் போது வர முடியவில்லை. அதனால், இளம் பாடகி ஒருவரை பாட வைத்து, 'டிராக்' எடுக்க முடிவானது. 'டிராக்' என்பது மற்றொருவரை தற்காலிகமாகப் பாட வைத்து, பதிவு செய்வதை குறிக்கிறது. பாடல் நன்றாக அமைந்தது. 'டிராக்'கில் பாடியவரின் குரல், இயக்குனருக்கு மிகவும் பிடித்து போக, தயாரிப்பாளரிடம் பேசி சம்மதம் வாங்கி, அந்த இளம் பாடகியையே, முழு பாடலையும் பாட வைத்து பதிவு செய்தார், பாசில். அன்று, ஜானகி வராததால் பாட வாய்ப்பு கிடைத்த அந்த பாடகி, இன்றைய பிரபல பாடகி, சித்ரா. — ஜோல்னாபையன்