உள்ளூர் செய்திகள்

சைக்கிளில் 19 ஆயிரம் கி.மீ., சுற்றியவர்!

நவீன் பால், வயது 31. பொறியாளர் பட்டம் பெற்ற இவருக்கு, புகைப்படம் எடுப்பதில் அதிக விருப்பம். எனவே, ஊர் ஊராக சைக்கிளில் செல்ல துவங்கினார். இயற்கை காட்சிகளை படம் பிடிக்க, சைக்கிள் இவருக்கு வசதியாக இருக்கவே, இந்தியாவின், 28 மாநிலங்களில், 19 ஆயிரம் கி.மீ., துாரம் சுற்றி வந்துள்ளார். 'லடாக் பனிமலை மீது பயணித்தபோது, 'ஆக்சிஜன்' குறைவால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்பட்டது. எவ்வளவு சங்கடங்களை சந்தித்தாலும், சைக்கிள் சவாரியை கைவிடமாட்டேன்...' என்கிறார், கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த, இந்த சாதனையாளர். - ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !