உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - எல்லாம் அறிந்தவன் பாரதி!

பாரதிக்கு தெரியும்...பாரத நாடு ஒருநாள்விடுதலை வாங்கி விடும் என்று...அதனால் தான்ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்றுஅன்றைக்கேபள்ளுப் பாடிச் சென்று விட்டான்!பாரதிக்கு தெரியும்...விஞ்ஞான வளர்ச்சியில்விளையாட்டுகள் எல்லாம்வீட்டை விட்டு ஓடிப் போகும்கைப்பேசிகள்கைரேகை போல் ஆகும்கையும் காலும் அதில்கட்டுண்டு முடங்கும் நாள் ஒன்று வரும் என்று...அதனால் தான்ஓடி விளையாடு பாப்பா என்றுஅன்றைக்கே பாடி வைத்து விட்டான்!பாரதிக்கு தெரியும்...பசியும் பட்டினியும்பொல்லாதவை என்று...அதனால் தான்தனி ஒரு மனிதனுக்குஉணவு இல்லை எனில்ஜகத்தை அழித்திடுவோம் என்று...சிட்டுக் குருவிகளை கூப்பிட்டுசோறு போட்டு மகிழ்ந்தான்!பாரதிக்கு தெரியும்...சினிமாக்கள் கூட ஜாதிகளை வைத்து தான்திரைப்படங்களை எடுக்கும் என்று...அதனால் தான்ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று...அன்றைக்கே பாட்டாக பாடி விட்டான்!புதுமைப் பெண்கள் நாட்டில் பிறப்பர்பெண் விடுதலை கிடைக்கும்சோறு சமைக்கும் பெண்கள்சட்டங்கள் செய்தும்பட்டங்கள் வாங்கியும்சபை ஏறிசரித்திரம் படைப்பர்ஆண்களோடு பெண்களும்சரிநிகர் சமானமாகிநாடாளும் நாள் ஒன்றுவருமென்று தீர்க்கதரிசிமகாகவி பாரதிக்கு அன்றே எல்லாம் தெரியும்!—  கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி.ஏப்., 7, 2024ம் தேதியில் கே.ஜே.செல்வராஜ், படம் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !