கவிதைச்சோலை - கணக்கெடுப்பு!
ஜாதிவாரிக் கணக்கெடுப்புகேட்கப்படுகிறதுபல மாநிலங்களில் பல தலைவர்களால்!பல ஆயிரம் ஜாதிகள் இந்த நாட்டில்சிலர் தலைவர்களாக இருக்க ஜாதிகள் தேவைப்படுகிறது!மக்கள் ஒற்றுமையாக அமைதியாக வாழ ஜாதி சங்கங்கள்ஒழிக்கப்பட வேண்டும்!ஏழை, எளியவர்களைகிராமப்புற பாமரர்களைஏற்றம் பெறச் செய்யபல வழிகள் உண்டு!கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும்மட்டுமே இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது!அந்தந்த சமூகத்தில்வேலை வாய்ப்பு பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் செல்வந்தர்கள்! பின் தங்கிய மாணவ மாணவியரை ஆளுக்கொருவர் தத்தெடுத்து படிக்க வைத்தால் போதும்...ஜாதி மதம் பாராத தொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் இங்குஏராளம் ஏராளம்! அரசின் ஆணைகளை விட நல் மனிதர்களின் உதவிகள் எப்போதும் வாழ வைக்கும்எல்லாரையும்!- சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.