உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: விதைத்துப் பார்!

உலகமெனும் மண்ணுக்குள் நீ எதை விதைக்கப் போகிறாய்... விதைக்கும் முன் விதையை தேர்வு செய்! இப்பூமிபந்துக்குள் ஆயிரம், ஆயிரமாய் நன்மைகள் மரங்களாகவும் தீமைகள் முட்செடிகளாகவும் நிரம்பிக் கிடக்கின்றன! உயிர்களிடத்தில் அன்பினை விதைத்துப் பார் எண்ணிடலங்கா நற்கனிகள் காய்த்து நிற்கும்! மனிதநேயத்தையும் இரக்க குணத்தையும் விதைத்துப் பார் மனிதர்களை வழிநடத்தும் உயரத்தில் உன்னை ஏற்றி வைக்கும்! பசித்தோர்க்கு உணவையும் வறியோர்க்கு வழிகாட்டுதலையும் விதைத்துப் பார் காலம் உன் பெயர் சொல்லும்! கல்வியை, ஒழுக்கத்தை நற்பண்புகளை பிறரிடம் விதைத்துப் பார் வசந்த காலத்தின் கதவுகள் திறக்கும்! மண்ணில் விழுந்த விதைகள் மரமாவது போன்றதுதான் மனித வாழ்வும்! விதைக்கும் முன் விதையைதேர்வு செய்... எதை விதைக்கப் போகிறோம் என்பதை! நீ விதைக்கும் விதைகளே உன் வாழ்க்கையின் ஆணிவேர்களாகும் என்பதை நினைவில் கொள்! - ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல். தொடர்புக்கு: 8675014239


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !