ரங்கோலி கோழி!
படத்திலுள்ள கோழியை பாருங்கள்... பல அடர் வண்ணங்களுடன் அழகாக காணப்படும் காட்டுக் கோழி இது. கேரளம் மாநிலம், பெரியார் புலிகள் பாதுகாப்பு மையத்தில், பல இடங்களில் இந்த அழகிய கோழிகளை காணலாம். பல நிறங்களில் இருப்பதால், 'ரங்கோலி கோழி' என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். இதன் அருகில் செல்ல முயன்றால், விலகி ஓடி, சற்று வித்தியாசமான குரலில் கூவுகின்றன. மனிதர்களை கண்ட உடன், காட்டின் உள்பகுதிக்கு சென்று மறைந்து கொள்கின்றன. — ஜோல்னாபையன்