சமையல் டிப்ஸ்!
தர்ப்பூசணி, வெள்ளரி துண்டுகள் மற்றும் ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து அதனுடன் மிளகுத்துாள், சர்க்கரை சேர்த்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி பெறும்; உஷ்ணத்திற்கும் நல்லது * பக்கோடாவில் கடலை மாவுக்குப் பதிலாக, பொட்டுக்கடலை மாவைப் பயன்படுத்தினால் சுவை கூடும். வயிற்றுக்கோளாறும் வராது * ரவா கேசரியில் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்தால் சுவை கூடும். நிறமும் அழகாக இருக்கும்; உடம்புக்கும் நல்லது * பொட்டுக்கடலை மாவு, தேன், தேங்காய்த் துருவல், பேரீச்சம்பழம் கலந்து உருண்டை பிடித்துக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான, சுவையான தின்பண்டம் இது * வெண்ணெய் காய்ச்சும்போது எலுமிச்சை இலைகள் போட்டால் நெய் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்கும் * உலர் திராட்சையை பன்னீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும் * புளிப்பில்லாத மாங்காய்களைத் தோல் சீவி, வேக வைத்து, சர்க்கரைப்பாகுடன் அடுப்பில் வைத்துக் கிளறி, ஜாமாக செய்து சாப்பிடலாம்.