சமையல் டிப்ஸ்!
வெள்ளைப் பூண்டை தனித்தனி பல்லாகப் பிரித்து, சிறிதளவு எண்ணெயில் பிசிறி, வெயிலில் அரை மணி நேரம் காய வைத்தால், எளிதாக உரிக்க வரும் * வெண்ணெய் மீது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை துாவி வைத்தால் உலராமல் அப்படியே இருக்கும் * இட்லி மிளகாய் பொடி அரைக்கும்போது சிறிது கொப்பரை சேர்த்தால், சுவையும், மணமும் கூடும். எள் அல்லது வேர்க்கடலையை வறுத்து அரைத்தும் சேர்க்கலாம் * உருளைக்கிழங்கை வெட்டிய பிறகு சிறிதளவு எலுமிச்சைச் சாறு பூசி வைத்தால் கறுக்காது * புதினா சாறு அரை தேக்கரண்டி, சீரகப்பொடி அரை தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 மூடி, உப்பு, பெருங்காயம் அரை தேக்கரண்டி ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடித்தால், புளித்த ஏப்பம் மற்றும் வயிற்றுப் பொருமல் நீங்கும் * கடலை உருண்டை பிடிக்கும்போது நல்லெண்ணெய் தொட்டுப் பிடித்துப் பாருங்கள். உருண்டை, கண்ணாடி போல் 'பளபள'ப்பாக இருக்கும்.