வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அன்றே சொன்னார். ஸ்டாலின், இன்று. நம். அரசியல்வாதிகளும். அப்படியே, எந்த ஒரு. . பிரசினைக்கும் 'கடந்த. அரசின்'. தலையில். பழி. போடுகிறார்கள்
ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபரான, ஜோசப் ஸ்டாலின், மரணப்படுக்கையில் இருந்தபோது, தன் தலைமை தளபதி, குருஷேவை அழைத்தார். குருஷேவிடம் இரண்டு கடிதங்களை கொடுத்து, 'இந்த இரண்டு கடிதங்களும் உங்களுக்குத் தான். இரண்டிலும் முக்கியமான விஷயங்களை எழுதியிருக்கிறேன். எனக்கு அடுத்து, இந்த சோவியத் யூனியனின் அதிபராக நீங்கள் வரும்போது, நீங்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையில் ஏதாவது நெருக்கடி ஏற்படும் போது, முதல் கடிதத்தை பிரித்துப் பாருங்கள்; உங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது, இரண்டாவது கடிதத்தை பிரித்துப் பாருங்கள்...' என்றார். சில நாட்களில், ஸ்டாலின் இறந்துவிட்டார். குருஷேவ், சோவியத் யூனியனின் அதிபரானதும், குறுகிய காலத்திலேயே அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, ஸ்டாலின் கொடுத்திருந்த முதல் கடிதத்தை படித்தார். அதில், 'எல்லாப் பழியையும் என் தலையில் போடு...' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே, 'நம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கெல்லாம் காரணம், எனக்கு முன் அதிபராக இருந்த ஸ்டாலின் தான்...' என்று நாடு முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்தார். விரைவிலேயே நெருக்கடி ஒருவாறு தணிந்தது. அதன்பின், 1964ல், குருஷேவின் அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது, ஸ்டாலின் கொடுத்திருந்த இரண்டாவது கடிதத்தை எடுத்து படித்தார். அதில், 'நீயும் என்னைப் போல் இரண்டு கடிதங்களை எழுதி, தயாராக வைத்துக்கொள்...' என்று எழுதப்பட்டிருந்தது. ****** தில்லை திருப்புகழ்சபை சிதம்பரம் எழுதிய, 'கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு!' என்ற நுாலிலிருந்து: கி ருபானந்த வாரியாருக்கு அப்போது, 28 வயது. திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள வள்ளியூரில் நான்கு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினார். அதன் முடிவில், நான்கு முழம் அகலமுள்ள பெரிய பொன்னாடையை வாரியாருக்கு போர்த்தி, 'வாரியார் எப்போதும் ஏழையாகவே இருக்க வேண்டும். இதற்காக நான் முருகப் பெருமானிடம் பிரார்த்திக்கிறேன்...' என்றார், மிளகாய் சுவாமிகள். இவர், அரைத்த மிளகாயை சாப்பிட்டு, மோர் மட்டும் குடிப்பதால், அவருக்கு மிளகாய் சுவாமிகள் எனப்பெயர். நிறைய பொருட்செல்வம் வேண்டும் என, வாழ்த்தாமல், இப்படி ஆசீர்வாதம் செய்கிறாரே... என, மனம் வருந்தினார், வாரியார். அவரது வருத்தத்தை பார்த்து, 'நீர் கோடீஸ்வரனாக இருந்தால், நாங்கள் அழைக்கிற போதெல்லாம் வருவீர்களா? நீர் ஏழையாக இருந்தால் தான் ஊர் ஊராகச் சென்று சொற்பொழிவு ஆற்றி, முருகன் பெருமையை பரப்புவீர். அந்தக் காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததால் தானே, தமிழை வளர்த்தனர். அதற்காகதான் அப்படி சொன்னேன்...' என்று, மிளகாய் சுவாமிகள் கூறிய பின்னரே, வாரியாரின் முகம் மலர்ந்தது. இன்னொரு சம்பவம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடியில், பாலகிருஷ்ண முதலியார் வீட்டில் தங்கியிருந்தார், கிருபானந்த வாரியார். முதலியாருக்கு, வாரியாரிடம் சாப்பிட என்ன பிடிக்கும் என்று, கேட்க, தயக்கம். இதனால், வாரியாரின் உதவியாளர், சேதுராமன் என்பவரிடம் கேட்டார். அவர் சொன்ன பதிலை, மற்றவர்களிடம் சொல்லி சொல்லி சிரிப்பார், வாரியார். அது... 'சுவாமிக்கு மிகவும் பிடித்தமானவை. மோர், ரசம், கீரை மற்றும் துவையல் ஆகியவை தான். வடை, பாயசமும் சேர்த்து செய்யுங்கள். நாங்கள் சாப்பிடுவோம்...' என்றாராம், அந்த உதவியாளர். நடுத்தெரு நாராயணன்
அன்றே சொன்னார். ஸ்டாலின், இன்று. நம். அரசியல்வாதிகளும். அப்படியே, எந்த ஒரு. . பிரசினைக்கும் 'கடந்த. அரசின்'. தலையில். பழி. போடுகிறார்கள்