உள்ளூர் செய்திகள்

பச்சை குத்திக்கொள்வதை கைவிடாத பழங்குடிகள்!

தெலுங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும், பழங்குடி மக்களுக்கு, பச்சை குத்திக் கொள்வது, அவர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்த, ஒரு பாரம்பரிய அம்சம்.பச்சை குத்திக் கொள்ளாமல், இவர்களால் திருமணம் செய்ய முடியாது. இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட, பச்சைக் குத்திக் கொள்வது தான் மருந்து. குழந்தைகளுக்கும் பச்சை குத்துகின்றனர்.இந்த பழங்குடி சமூகத்தில் உள்ள சில பெண்கள், பச்சைக் குத்துவதை, தலைமுறை தலைமுறையாக, பரம்பரைத் தொழிலாகவும் செய்து வருகின்றனர்.இவர்களின் முன்னோர், மிகப்பெரிய வடிவில் பச்சை குத்திக் கொண்டனர். ஆனால், தற்போதைய தலைமுறையினர், அதை விரும்பாமல், திருமணம் ஆக வேண்டும் என்று, சிறிய வடிவில் பச்சை குத்திக் கொள்கின்றனர். — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !