உள்ளூர் செய்திகள்

முயற்சி + பயிற்சி = வெற்றி! கவிதைச்சோலை!

முயற்சி செய்தும் பயனில்லை என்றால் நம்மால் முடியாது என்ற முடிவுக்கு முதலிலேயே வந்து விடாதீர்! முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விடாமல் பலமுறை முயன்று வென்றவர்கள் பாரினில் உண்டு என்பதை மறந்துவிடாதீர்! பலமுறை தோல்விகண்ட எடிசன் கூட ஓர் இரவில் தன்னம்பிக்கை தீயை எரியச் செய்ததை எண்ணாமல் இருந்து விடாதீர்! மண்ணுக்குள் விழுந்த விதை கூட ஓர் இரவில் வளர்ந்துவிடுவதில்லை காலத்தின் துணைக்கொண்டு கற்பக விருட்சமானதை உணராமல் இருந்து விடாதீர்! முதல் வகுப்பு கிறுக்கல்கள் கிறுக்கல்களாகவே இருந்து விடுவதில்லை பலமுறை முயற்சிக்கு பின் தான் முத்தான எழுத்துகளாக முத்திரை பதித்ததை நினைக்காமல் இருந்து விடாதீர்! முயற்சியும் பயிற்சியும் மனதினில் உறுதியுமிருந்தால் நம்பி வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகளாய் அமையும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்! —  மா.பழனி, தருமபுரி. தொடர்புக்கு: 96265 87770


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !