உலகம் சுற்றும் வாலிபன்!
கேரள மாநிலம், கோட்டயம் அடுத்த, கங்கழா கிராமத்தில், சிறு அப்பள நிறுவனம் துவங்கி, அப்பளம் தயாரித்து விற்ற பணத்தை சேமித்து, சாதனை படைத்து வருகிறார், 70 வயதான ராஜன். இவர் உலகம் சுற்றும் வாலிபனாக இருக்கிறார். சேமித்த பணத்தில், இதுவரை இவர் சென்று வந்த நாடுகள், 40. 'சிறுவயதில் இருந்தே உலகம் சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை, 50 வயதில் தான் நிறைவேறியது. சேமித்த பணத்தை வைத்து, முதலில் சென்ற நாடு, சீனா. 'என் இறுதி காலம் வரை பயணம் தொடரும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து என்ன பயன், அதை எடுத்துக் கொண்டு போகவா முடியும்?' என்கிறார், ராஜன். ஜோல்னாபையன்