உள்ளூர் செய்திகள்

வடாம் டிப்ஸ்!

* வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும் * மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும் * வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம் * வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம் * இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !