இதப்படிங்க முதல்ல...
10 நிமிடத்திற்கு, ரூ. 6 கோடி செலவு!தற்போது, விஜய் நடித்து வரும், 68வது படத்தில், அப்பா -- மகன் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.இதில், மகன் விஜயை, 25 வயது இளைஞராக காட்டுகிறார், இயக்குனர் வெங்கட் பிரபு. அப்படி இளமையாக, விஜயை திரையில் கொண்டு வருவதற்கு, 'டி-ஏஜிங்' என்ற ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜயை, 10 நிமிடங்கள் இளமையாக காட்டுவதற்கு, ஆறு கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். அதனால், இப்படத்தின் மொத்த பட்ஜெட்டில், இந்த ஹாலிவுட் தொழில்நுட்பத்துக்கு மட்டுமே பெருந்தொகை செலவிடப்படுகிறது.— சினிமா பொன்னையாபுகுந்து விளையாடு, தீபிகா!திருமணத்திற்கு பின், ஷாருக்கானுக்கு ஜோடியாக, பதான் என்ற படத்தில், 'பிகினி' உடை அணிந்து நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், தீபிகா படுகோனே. தற்போது, ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக, பைட்டர் என்ற படத்தில், பதான் படத்தை விடவும், படு கவர்ச்சியாக, 'பிகினி' மற்றும் 'லிப் லாக்' காட்சிகளில் நடித்து, பாலிவுட்டை அதிர விட்டுள்ளார்.திருமணத்துக்கு பிறகும், தீபிகா, 'பிட்' நடிகையரையே துாக்கி சாப்பிடும் அளவுக்கு, புகுந்து விளையாடி வருவதால், பாலிவுட்டின் இளவட்ட அம்மணிகளெல்லாம், தங்கள் மார்க்கெட்டை இவர் காலி பண்ணி விடுவாரோ என்ற பீதியில் இருக்கின்றனர். — எலீசாரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும், ராஷ்மிகா மந்தனா!பான் இந்தியா நடிகையாக வலம் வரும், ராஷ்மிகா மந்தனாவிடம், அவரை சொந்தமாக படம் தயாரிக்குமாறு கூறினர், சிலர்.'அது போன்ற ஆபத்தான விளையாட்டில் எல்லாம் நான் இறங்க மாட்டேன்...' என்று கூறியவர், தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதியை, அசையா சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறார்.அதோடு, தன் சொந்த மாநிலமான கர்நாடகாவில், ஏற்கனவே வாங்கிய நிலங்களில், 'அப்பார்ட்மென்ட்' கட்டி, விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறார். — எலீசாசலார் படத்தை எதிர்பார்க்கும், பிரபாஸ்!ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ் நடித்த, பாகுபலி படத்தின், இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. அதன்பின் அவர் நடித்த, சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புருஷ் ஆகிய படங்கள், அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்தன.தற்போது, கேஜிஎப் படத்தை இயக்கிய, பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள, சலார் படத்தில் நடித்துள்ளார், பிரபாஸ்.'என் நடிப்பில், முந்தைய மூன்று படங்களும் அடுத்தடுத்து தோல்வியாக அமைந்தன. இந்நிலையில், அதில் விட்ட மொத்த வசூலையும், இப்படம் ஈட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கை, 100 சதவீதம் உள்ளது...' என்கிறார்.சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!தாரா நடிகை, சினிமாவில், 'பிசி'யாக நடித்து வந்தபோதும், சினிமாவுக்கு அப்பாற்பட்டு, மூன்று தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அதில் ஒன்று, பெமி-2 என்ற சானிட்டரி நாப்கின்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார்.சமீபத்தில் சென்னையில், மழை வெள்ளத்தால் மக்கள் அவதிப்பட்டபோது, தன் கம்பெனி தயாரிப்பு நாப்கின்களை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுத்து, விளம்பரம் செய்திருக்கிறார், நடிகை. அதோடு, தான் இலவசமாக கொடுக்கும் அந்த காட்சிகளை, வீடியோவாக படமாக்கி, 'சோஷியல் மீடியா'க்களிலும் வெளியிட்டுள்ளார்.சினி துளிகள்!* அன்னபூரணி படத்தில் நடிப்பதற்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார், நயன்தாரா.'இது ரொம்ப ஜாஸ்தி...' என, அவரிடத்தில் விவாதம் செய்தனர், சில தயாரிப்பாளர்கள். இருப்பினும், நயன்தாரா தமிழில் நடிக்கும் படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில், 'டப்' செய்து விடலாம் என்பதால், பலர் இதை பெரிசுபடுத்தாமல் அவர் கேட்ட தொகையை கொடுத்து, 'புக்' பண்ண தயாராகி விட்டனர்.* சென்னை மழை நீரில் மக்களெல்லாம் தத்தளித்தபோது, 'நாய்களுக்கு உதவ முன் வாருங்கள்' என்று 'ப்ளூ கிராஸ்' வீடியோவை வெளியிட்டிருந்தார், நடிகை த்ரிஷா.அதைப்பார்த்து, 'மனிதர்களை காப்பாற்றவே, இங்க ஆள் இல்லை. இதில், நாய்களை காப்பாற்ற வர வேண்டுமா?' என்று, வீடியோ போட்டிருந்த த்ரிஷாவை, பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.* ஆங்கில பத்திரிகையின் அட்டைப் படத்திற்கு, திரைப்படங்களில் நடிப்பதை விட, படு கவர்ச்சி உடை அணிந்து, 'போஸ்' கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார், சமந்தா.அவ்ளோதான்!