உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

பிரமாண்ட மாநாட்டுக்கு தயாராகும், விஜய்!வரும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், நடிகர் விஜய், ஜூன் 22ம் தேதி, தன், 50வது பிறந்தநாளை ஒட்டி, மதுரையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாட்டில், தன் பலத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுக்க உள்ள, தன் ரசிகர்களை கலந்து கொள்ள, சுற்றறிக்கை விட்டுள்ளார், விஜய். அந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை என்ன; தனக்கு ஆதரவளித்தால், தமிழக மக்களுக்கு செய்யப் போவது என்ன என்பது குறித்த மொத்த பட்டியலையும் வெளியிட்டு, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார், விஜய். மேலும், மாணவ - மாணவியரின் படிப்பு துவங்கி, அவர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது ஆகியவற்றை முன்னிறுத்தியே, கட்சியின் கொள்கைகளை உருவாக்கி இருக்கிறார். — சினிமா பொன்னையாஎடை குறைக்க விரும்பாத, அபர்ணா பாலமுரளி!சூரரைப் போற்று மற்றும் 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்தார், மலையாள நடிகை, அபர்ணா பாலமுரளி; தற்போது, தனுஷுடன், ராயன் படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து, சில படங்களில் நடிக்க, அவருக்கு அழைப்பு விடுத்துள்ள, இயக்குனர், எடை குறைத்து, 'ஸ்லிம்' ஆகுமாறு கூறியுள்ளார்.அதற்கு, 'என்னுடைய உடல் எடையை குறைத்தால், என் அழகே காணாமல் போய்விடும். குண்டாக இருந்தால் மட்டும் தான், நான் அழகாக இருப்பேன். அதனால், என், உடல்வாகுக்கு ஏற்ற வேடங்கள் இருந்தால் கொடுங்கள்; இல்லையேல் ஆளை விடுங்கள்...' என்று சொல்லி விட்டார், அபர்ணா.எலீசாசுந்தர்.சியை துரத்தும், தமன்னா!சுந்தர்.சி இயக்கத்தில், திரைக்கு வந்த, அரண்மனை- - 4 படத்தில், நாயகியாக நடித்திருந்தார், தமன்னா. அந்த படம் அவருக்கு, 'ஹிட்' அடித்த போதும், புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. இதன் காரணமாகவே, அடுத்து, சுந்தர்.சி இயக்கும், கலகலப்பு- - 3 படத்தில், தனக்கு நாயகி வேடம் தர வேண்டும் என்று, அவரிடம் விண்ணப்பம் போட்டுள்ளார், தமன்னா.அடுத்து, அவர் இயக்கப் போவது காமெடி படம் என்பதால், மற்ற மொழிகளில், தான் காமெடி வேடங்களில் நடித்த வீடியோக்களை அனுப்பியுள்ளார். 'கவர்ச்சி மட்டுமின்றி, காமெடியிலும் என்னால், 'ஸ்கோர்' பண்ண முடியும்...' என்று, தன் மீது, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்.— சி.பொ.,அனிருத்தை கை காட்டிய, ஷாருக்கான்!ஹிந்தியில், அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்த, ஜவான் படத்திற்கு இசையமைத்தார், அனிருத். அது, ஷாருக்கானுக்கு, 1,500 கோடி ரூபாய் வசூல் சாதனை படமாக அமைந்தது. அந்தப் படத்தின் பாடல்களும், 'ஹிட்' அடித்த நிலையில், அடுத்து, தான் நடிக்கும், கிங் என்ற ஹிந்தி படத்தில் இசையமைக்கவும், அனிருத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறார், ஷாருக்கான். புதிய படத்தின் 'கம்போசிங்'கிற்காக, தற்போது, மும்பையில் முகாமிட்டிருக்கிறார், அனிருத்.— சினிமா பொன்னையாகறுப்பு பூனை!எப்போதுமே, தல நடிகர் ஒரு படத்தில் நடிக்க துவங்கி விட்டால், அதை முடித்துவிட்டு தான் அடுத்த படத்துக்கு செல்வார். ஆனால், தற்போது அவர் நடித்து வரும், ஆறெழுத்து படத்தை தயாரிக்கும் இரண்டெழுத்து பட நிறுவனம், உச்ச நடிகரின் படத்தையும் தயாரிப்பதால், 'பைனான்ஸ்' நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, சில மாதங்களாக, தல நடிகரின் படத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும், தல நடிகர், அதற்குள், அடுத்த படத்தில் நடிக்க துவங்கி விட்டார். 'தற்போது நடிக்கும் புதிய படத்தில் நடித்த முடித்த பிறகு தான், முந்தைய படத்தில் மீண்டும் நடிக்க, 'கால்ஷீட்' கொடுப்பேன்...' என்று, மேற்படி படக்குழுவுக்கு, 'செம ஷாக்' கொடுத்து விட்டார்.சினி துளிகள்!* ஜூன், 27ம் தேதி முதல் நான்கு நாட்கள், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், விஜய்சேதுபதி நடித்துள்ள, மகாராஜா படமும் திரையிடப்படுகிறது.* சுகாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர், முக்கிய வேடங்களில், தி வெர்டிக்ட் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளனர். இது, முழுக்க முழுக்க, அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது.* ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிக்கும், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் துவங்கி இருக்கிறது.* உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான் மற்றும் அரிமா நம்பி என, பல படங்களில் நடித்துள்ளார், லேகா வாஷிங்டன்; நடிகர் அமீர்கானின் உறவினரான, இம்ரான்கான் என்பவரை காதலித்து வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !