உள்ளூர் செய்திகள்

சோப்பு போட்டு கழுவலாம்!

இன்று மக்களிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மொபைல் போன் நிறுவனங்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இந்நிறுவனங்கள், புதுவித யுக்திகளை புகுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்ய துடிக்கின்றன.ஜப்பானை சேர்ந்த கொயோசெரா டெலிகாம் என்ற நிறுவனம், மற்ற நிறுவனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக, 'டிக்கோ ரபேர்' என்ற பெயரில், 'ஆண்ட்ராய்டு' வசதியுடைய புதிய மொபைல் போனை தயாரித்துள்ளது. தண்ணீர் புகாத, 'வாட்டர் ப்ரூப்' தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போனை, சோப்பு போட்டு கழுவலாம்; தண்ணீரில் தூக்கி போட்டாலும், ஸ்பீக்கர், கேமரா என, எதிலுமே தண்ணீர் இறங்காது. இதனால், போன் பழுதாகி விடுமே என்ற கவலையும் இல்லை.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !