உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - அவரைக்காய்!

தினமும், உணவில், அவரைக்காய் பொரியல், கூட்டு செய்து சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து, நிரந்தரமாக விடுபடலாம்.உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைக்க ஆசைப்படுவோர், அதிகளவில் அவரைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்; ஏனெனில், இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.வயது அதிகரிக்க அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால், உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதில், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானம் சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து விடுபட உதவுகிறது. உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், உடல் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.பித்தத்தால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகளுக்கு, அவரைக்காய் சிறந்த மருந்து.கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், வாரம் ஒரு முறை அல்லது இருமுறை, அவரைக்காய் சாப்பிட்டு வந்தால், பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். இதில், பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால், இதய நோய்களிலிருந்து, நம்மை காக்கிறது.அவரைக்காயை அதிகம் உண்டு வந்தால், வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும். அவரைப் பிஞ்சில், துவர்ப்புச் சுவை உள்ளதால், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள், அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை கட்டுப்படும்.மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும், சிறுநீரைப் பெருக்கும். மூல நோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. சளி, இருமலைப் போக்கும். தொகுப்பு: ரா.அமிர்தவர்ஷினி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !