உள்ளூர் செய்திகள்

ஏஞ்சலினாவுக்கு என்னாச்சு?

ஹாலிவுட்டின் அழகு தேவதையாக வலம் வந்த, 40 வயதான ஏஞ்சலினா ஜோலியின், தற்போதைய தோற்றம், பரிதாபகரமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், புற்றுநோய் காரணமாக, கர்ப்பப்பையை அகற்றியதில், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த, குங்பூ பாண்டா - 3 என்ற படத்தின் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த ஏஞ்சலினா, மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாக காட்சி அளித்தார். அவரது இப்போதைய எடை, 35 கிலோ தானாம். அதனால், படத்தில் நடிப்பதற்கு தற்காலிகமாக முழுக்கு போட்டு, உடல் நலத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !