மனைவியை சுமந்து ஓடினால் எடைக்கு எடை பீர் பரிசு!
ஐரோப்பிய நாடான பின்லாந்தில், ஒவ்வொரு ஆண்டும், மனைவியை சுமந்தபடி, ஓடும் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, கணவர்கள், தங்கள் மனைவியரை முதுகில் சுமந்தபடி, 832 அடி தூரம் ஓட வேண்டும். இடையில், சிறிய நீச்சல் குளம், மணல், தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொருவரும், தங்கள் மனைவியரை சுமந்தபடி, இந்த தடைகளை கடந்து ஓட வேண்டும். வெற்றி பெறும் ஜோடிக்கு, மனைவியின் எடையின் அளவிற்கு, பீர் பரிசளிக்கப்படும். இந்தாண்டு நடந்த போட்டியில், பாவியார்னியன் விஜானென் என்ற ஜோடி வெற்றி பெற்றது. கடந்தாண்டும், இவர்களே வெற்றி பெற்றனர்!— ஜோல்னாபையன்.