என்னதான் பிசியாக இருந்தாலும், அதற்காக இப்படியா....
பிரேசிலை சேர்ந்த பிரபல மாடல் அழகி, ஜிஸ்லே பன்ட்சன். ஐரோப்பிய நாடுகளில் இவர் நடிக்கும் விளம்பரங்களுக்கு, கடும் கிராக்கி உண்டு. இதனால், எப்போதும், ஏதாவது ஒரு நாட்டுக்கு, விமானத்தில் பறந்து கொண்டு தான், இருப்பார். சமீபத்தில், ஒரு விளம்பர படப் பிடிப்பிற்காக, 'மேக்-அப்' போடும் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை, இணையதளத்தில், இவர் வெளியிட்டுள்ளார். அதில், ஒருவர், இவரின் நகங்களுக்கு, சாயம் பூசுகிறார்; மற்றொருவர், 'மேக்-அப்' போடுகிறார். இன்னொருவர், தலைமுடியை அலங்கரிக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தன், ஒரு வயது குழந்தை, விவியனுக்கு, தாய்ப்பால் ஊட்டுகிறார், ஜிஸ்லே. இந்த புகைப்படம், இணைய தளத்தில் வெளியானதும், 'எவ்வளவு பிசியாக இருந்தாலும், குழந்தைக்கு பாலூட்டுவதை எல்லாம், இணையதளத்தில் வெளியிடலாமா...' என, அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ஜிஸ்லே,'ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரம் தான் தூங்குகிறேன். அந்த அளவுக்கு, பிசியாக இருக்கிறேன். கிடைக்கிற நேரத்தில், குழந்தைக்கு பாலூட்டுகிறேன். இதை, இணையதளத்தில் வெளியிட்டது, உலக மகா குற்றமா...' என, சீறிப் பாய்கிறார்.— ஜோல்னா பையன்.