உள்ளூர் செய்திகள்

யோகா நகரம்!

யோகா பிறந்த இடம் என்று போற்றப்படும் நகரம், எது என்று கேட்டால், உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரிஷிகேஷ் என்பர்.இப்போதெல்லாம் யோகா செய்வதில் வெளிநாட்டினர், நம்முடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். சந்திரபாக் நதி, கங்கையில் கலக்கும் இடம் தான், ரிஷிகேஷ். இங்குள்ள எல்லா ஆசிரமங்களிலும் யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில் மோட்சம் பெற வேண்டும் என்ற நோக்குடன், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணியரும் இங்கு வருகின்றனர். இங்கு, எந்தப் பக்கம் பார்த்தாலும், வெள்ளையர்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !