எல்லாரும் இன்புற்றிருக்க யோகா!
உள்ளூர் சரக்கு எப்போதும் இந்தியாவில் விலை போவது இல்லை. ஆனால், அதே சரக்கு, வெளிநாடுகளில் அமோகமாக வரவேற்கப்பட்டு, பிரமாதமாக வளரும். அவற்றுள் ஒன்றுதான் யோகா. யோகாவின் தாயகம் இந்தியா என்றாலும், இப்போது இதை கொண்டாடுபவர்களும், இதன் பலனை அனுபவிப்பவர்களும் வெளிநாட்டினர்தான். அதிலும், குறிப்பாக சீனர்கள்.யோகா கற்றுக்கொள்வதன் மூலம், உடலும், மனமும் சீராகிறது. எவ்வித நோய்களும் வராமல் கவசமாக உடலை காக்கிறது. வந்த நோய்களை மருந்து, மாத்திரை சாப்பிடாமலேயே குணமாக்குகிறது, உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துகிறது. நாள் முழுவதும் களைப்பின்றி செயல்பட வழி வகுக்கிறது. எந்தவித பிரச்னை என்றாலும், எதிர்கொள்ளும் மன உறுதியை வழங்குகிறது... இப்படி இன்னும் எத்தனையோ நன்மைகளுக்கு யோகா வழிகாட்டுகிறது.இந்த யோகா கலையை முறைப்படி விஞ்ஞான அடிப்படையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், முதியோர்களின் தேவைக்கு ஏற்ப கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் யோ-பி யோகா மையம். யோ-பி யோகா மையத்தில், உடலையும், மனதையும் மேம்படுத்தும் ஹத யோகா மற்றும் உடலை சமப்படுத்தும் பவர் யோகா, யோகா சிகிச்சை, பிரணா யாமம் மற்றும் ஆழ்நிலை தியானப் பயிற்சி ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகிறது.யோ-பி யோகா, தன் முதல் பயிற்சி மையத்தை ஹாங்காங்கில் (சீனா) துவக்கியுள்ளது. இந்த யோ-பி யோகாவின் குருநாதராக உள்ள தமிழர் யோகராஜ்தான், இந்த ஹாங்காங் மையத்தின் பயிற்சியாளராகவும் உள்ளார். இவர் யோகாவில் கின்னஸ் சாதனை செய்தவர். யோ-பி பயிற்சி மையத்தின் பாடத்திட்டங் கள்தான், சீன நாட்டு பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.உடலின் புற அழகைப் பேணி பாதுகாப்பதில் முன்னோடி நிறுவனமாக விளங்கும், 'நேச்சுரல்ஸ் ஸ்பா அண்ட் சலூன்' நிறுவனத்தின் புதிய முயற்சியே, இந்த யோ-பி வெல்னெஸ் சென்டர். இந்நிறுவனத்தின் தலைவர் சி.கே.அசோக்குமார், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்.இவர், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வைத்து நவீன முறையில் யோ-பி யோகா மையத்தை, சென்னையில் உள்ள ரஷ்யன் கலாசார மையத்தில் துவக்கியுள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய