உள்ளூர் செய்திகள்

இப்படியும் இன்டர்வியூ நடத்தலாம்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாப் பாடகி, கர்ட்னி ஸ்டட்டன். விரைவில், ஒரு பாப் ஆல்பம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் நடிப்பதற்கு, ஒரு ஆண் மாடல் தேவைப்பட்டது. இதற்காக, தன் அலுவலகத்தில் சமீபத்தில் நேர்முகத் தேர்வை நடத்தினார். நோட் புக், பேனாவுடன், தன் தாயார், கணவர் ஆகியோருடன் அமர்ந்து, ஒவ்வொருவராக வரவழைத்து, ஒவ்வொருவருக்கும், மார்க் போட்டு, நேர்முகத் தேர்வை நடத்தினார்.திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 'பாப் ஆல்பத்தில், என்னுடன் பங்கேற்கும் மாடல், சட்டையில்லாமல் தான் நடிக்க வேண்டும். எனவே, நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் ஆண்கள், சட்டையை கழற்றி விட்டு, போஸ் கொடுக்க வேண்டும். அவர்களின் உடல் கட்டை பார்த்து, பொருத்தமானவரை தேர்வு செய்வேன்...' என்றார்.கர்ட்னி ஸ்டட்டனின், இந்த விசித்திரமான ஆசையை, அவரது கணவரும், வழி மொழிந்தார். இதன்பின், நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்கள், தங்கள் சட்டையை கழற்றி விட்டு, கர்ட்னி ஸ்டட்டன் முன், போஸ் கொடுத்தனர். நீண்ட நேரத்துக்கு பின், அவர்களில் ஒருவரை, தன் ஆல்பத்துக்காக தேர்வு செய்தார்.கர்ட்னி ஸ்டட்டனின், இந்த விசித்திரமான நேர்முகத் தேர்வு, அமெரிக்காவில் உள்ள சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு போனஸ் தகவல்: கர்ட்னிக்கு, 18 வயது தான் ஆகிறது; அவரது கணவர், டக்ஹட்சனுக்கு, 52 வயது.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !