தேசிய கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியர் வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த தேசிய கட்டட கட்டுமான நிறுவனத்தில் (என்.பி.சி.சி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் 35 (சிவில் 20, எலக்ட்ரிக்கல் 10, மெக்கானிக்கல் 5), அசிஸ்டென்ட் மேனேஜர் 7, புராஜக்ட் எக்சிகியூட்டிவ் 10 உட்பட மொத்தம் 59 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.இ.,/ பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 6.3.2026 விவரங்களுக்கு: nbccindia.in