இந்திய ரயில்வேயில் வேலை
இந்திய ரயில்வேயில் 'பாரா மெடிக்கல்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நர்சிங் சூப்ரென்டன்ட் 272, டயாலசிஸ் டெக்னீசியன் 4, ஹெல்த், மலேரியா இன்ஸ்பெக்டர் 33, பார்மசிஸ்ட் 105, எக்ஸ்ரே டெக்னீசியன் 4, இ.சி.ஜி., டெக்னீசியன் 4, ஆய்வக உதவியாளர் 12 என மொத்தம் 434 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி.,/டிப்ளமோ வயது: 20 - 43, 18 - 36 (8.9.2025ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250 கடைசிநாள்: 8.9.2025 விவரங்களுக்கு: rrbchennai.gov.in