மின்னணு ஆய்வு மையத்தில் டெக்னீசியன் பணி
மத்திய எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆய்வு மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னிக்கல் ஆபிசர் 8, டெக்னீசியன் 14 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18 - 28, 18 - 30 (20.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு. பணியிடம்: சென்னை, ஜெய்ப்பூர் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 20.6.2026 விவரங்களுக்கு: ceeri.res.in