உள்ளூர் செய்திகள்

கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் வாய்ப்பு

சென்னையில் உள்ள கணித அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐ.எம்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்:டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, ஜே.ஆர்.எப்., 1, சிஸ்டம் டிரைய்னி 2, ரிசர்ச் அசோசியேட் 4, புராஜக்ட்உதவியாளர் 4, நிர்வாகஉதவியாளர் 4, நுாலகஉதவியாளர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி:தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்புமுடித்திருக்க வேண்டும்.வயது:26.1.2024 அடிப்படையில் நிர்வாக உதவியாளர் 27, நுாலக உதவியாளர் 25, மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை:எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.கடைசிநாள்:26.1.2024விபரங்களுக்கு:imsc.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !