உள்ளூர் செய்திகள்

ஊட்டச்சத்து நிறுவனத்தில் பணி

ஐ.சி.எம்.ஆர். கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, டெக்னீசியன் 14, ஆய்வக உதவியாளர் 22 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி, மற்ற பணிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது: பதவி வாரியாக 18 - 25, 18 - 28, 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.தேர்வு மையம்: ஐதராபாத்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 16.6.2024விவரங்களுக்கு: icmrnin-recruitment.aptonline.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !