உள்ளூர் செய்திகள்

அதிக லாபத்தைக் கொடுக்கும் நெல் ரகத்தில் கூடுதல் லாபம் பெற புதிய முயற்சி

ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் 'டைரக்டரேட் ஆப் ரைஸ் ரிசர்ச்' என்னும் நிலையம் புதிய உயர் விளைச்சல் நெல் ரகமாகிய 'ஆர்.பி. பயோ 226' வெளியிட்டுள்ளது. இதன் அரிசியின் குணம் மிகவும் சிறப்பாக உள்ளது. அரவையில் 70 சதவீத அரிசி கிடைக்கின்றது. உடையாத பச்சரிசி 65 சதவீதம் கிடைக்கின்றது. நுகர்வோர்கள் இந்த அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றனர். இந்த ரகத்தை இந்தியாவில் நெல் சாகுபடி செய்யும் பல இடங்களில் சாகுபடி செய்து பார்த்ததில் எல்லா இடங்களிலும் விவசாயிகள் நுகர்வோர்கள் இவர்களை முழுமையாக திருப்தி செய்துள்ளது.புதிய ரகத்தில் பேக்டீரியல் இலைக்கருகல் நோய் தாக்குவது இல்லை. இதன் வயது 135 - 140 நாட்களாக உள்ளது. நம் பகுதியிலும் இந்த புதிய நெல் ரகத்தை சாகுபடி செய்யலாம். இதன் மகசூல் திறன் ஏக்கருக்கு 2 - 2.5 டன்னாகும். மிக சன்ன அரிசி கொண்டது. நல்ல சமைக்கும் தன்மை கொண்டது. தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி எஸ்.சுந்தரம் (43, கடைவீதி, திருக்காட்டுப்பள்ளி-613 104, தஞ்சாவூர் மாவட்டம்) புதிய ரகத்தை தாளடி பட்டத்தில் சாகுபடி செய்து நல்ல பலன் அடைந்துள்ளார். வழக்கமாக செய்யும் சாகுபடியில் எடுக்கும் லாபத்தைவிட பல மடங்கு அதிகமான லாபத்தை அடைய வேண்டுமென்று திட்டமிட்டு செயலில் இறங்கினார். இவர் முதலில் சாதாரண முறையில் (நாற்று விட்டு நடும் முறை) சாகுபடி செய்தால் என்ன செலவாகும் என்பதை தெரிந்துகொண்டார். சாதாரண முறையில் ஒரு ஏக்கரில் ஆகும் செலவு ரூ.16,850 என்று புரிந்துகொண்டார். சாகுபடி செலவை புதிய முறையை அனுசரித்து ரூ.13,275 ஆக குறைத்தார். புதிய முறையை (கருவி நடவு முறை) அனுசரித்ததால் ஏக்கருக்கு ரூ.3,575 மிச்சமானது. இதனால் புதிய ரகத்தில் நிகர லாபமானது கணிசமாக அதிகரித்தது. அதிக லாபத்தை எடுக்க விவசாயி கருவி நடவு முறையை அனுசரித்தார். கருவி நடவு முறையில் செலவு கீழ்க்கண்டபடி ஆனது.ரூ.விதை 15 கிலோ - 375 டிரே விதைப்பு - 200உழவு டிராக்டர் - 900பரம்படித்தல் - 200டிரே எடுத்துச்செல்ல செலவு - 200நடவு - 800வரப்பு வெட்ட - 300அடி உரம் - 1,200உரம் தெளிக்க - 100ஜிங்க் சல்பேட் - 200களைக்கொல்லி - 200களைக்கொல்லி ஜிங்க் சல்பேட் தெளிக்க - 100கோனோவீடர் தள்ள 3முறைக்கு - 1,000இரண்டு களையெடுக்க - 500பூச்சிமருந்து மூன்று முறை - 1,000பூச்சி மருந்து அடிக்க 3 முறை - 400தண்ணீர் பாசனம் காவல் - 2,000அறுவடை மிஷின் - 2,000டிராக்டர் டிப்பர் - 600நெல் வீட்டிற்கு எடுத்துச்செல்ல - 1,000கருவி நடவு முறையில் மொத்த செலவு - 13,275சாதாரண நடவுமுறையில் மொத்த சாகுபடி செலவு - 16,850கருவி நடவு முறையில் ரூ.3,575 செலவு குறைந்துவிடுகிறது. ஆதலின் எதிர்காலத்தில் சாகுபடி செலவை குறைத்து மிக அதிகமான லாபத்தை அடைய விவசாயிகள் கருவிகொண்டு நாற்று நடும் முறையை அனுசரிக்க வேண்டும்.-எஸ்.எஸ்.நாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !