சுயஉதவிக்குழு மூலம் பலவித தோட்டக்கலை சார் தொழில் வாய்ப்பு
தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தி செய்துள்ள பகுதிகளில் சுயதொழில் துவங்க நல்ல வழி உள்ளது. குறிப்பாக தக்காளி, மரவள்ளி, பப்பாளி, வாழை, மூங்கில், தென்னை, உருளைக்கிழங்கு, காளான் மற்றும் மா சார்பு தொழில்கள் லாபம் தரும். விளை பொருட்களை மதிப்புக்கூட்டிய வாய்ப்பு உடைய இவற்றை விளைநிலத்தில் முடியாதவர்கள் கொள்முதல் செய்தும் தொழில் துவங்கலாம். சிறப்பு பயிற்சிகள் இவை குறித்து நிறைய உள்ளன.விளைபொருளின் விலை வீழ்ச்சியை காரணம் காட்டி விவசாயிகள் வேதனைப்பட அவசியம் இல்லை. முன்னோடி உத்திகளில் உடுமலையில் நிலவும் வெயில் மற்றும் காற்று சூரிய ஒளியைப் பயன்படுத்தி உலர்கலன்கள் அமைத்து பலவித லாபம் தரும் தொழில்கள் செய்திடலாம். வரவுக்கு உதவும் தென்னை சார்பு தொழில் வாய்ப்பும் நிறைய உள்ளது. இவை குறித்தும் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தி ஜாம், ஜெல்லி, சூப், சாஸ் தயாரித்திடவும் சிறப்பு பயிற்சி பெற விரும்புவோர் தோட்டக்கலைத்துறையின் ஆலோசனை பெறலாம். தங்களது பெயரை பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளும் டாக்டர் பா.இளங்கோவன், தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை.மணத்தக்காளி, செங்கீரை முதலியன கிழவன்காட்டூர் பகுதியில் உற்பத்தி செய்து நல்ல வரவு பெற்று வருவது கண்கூடு நீர், இல்லை என்று புலம்பாமல் இருக்கின்ற வசதி வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி மழையை நம்பி வரும் பலவித பழமரங்கள் மற்றும் கீரை மற்றும் தீவனப்பயிர்கள் உற்பத்தி செய்திட தற்போது திட்டமிட வேண்டும்.தமக்கு தேவையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்திட சிறிய பரப்பும் பசுமை வலையும் குறைந்த அளவு நீர் இருந்தாலே போதும். வாய்ப்பு உள்ள இடத்தில் 10-15 விவசாயிகள் சேர்ந்தும் நாற்று உற்பத்தி செய்யலாம்.பப்பாளி, செடி முருங்கை உற்பத்திக்கு குழித்தட்டுக்களை பயன்படுத்தலாம். சொந்தமாக தயாரிக்க முடியாத நிலையில் அரசின் தோட்டக்கலைப் பண்ணைகளில் இருந்து வாங்கலாம். தற்போது நிறைய நர்சரிகள் விதவிதமாக நாற்றுகள் பல நிலைகளில் தயாரித்து வருகின்றன. விவசாயிகள் தமது நிலப்பரப்பில் நட உள்ள மரங்களின் மகசூல் தரும் திறன் அதிகரித்திட நிச்சயம் வெர்மை மிக்ஸ் உரம் பலவித உயிர் கலவைகள் சேர்ந்து கிட்டும் வேம்பு, வேப்பம் பிண்ணாக்கு, சூடோமோனால் அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா முதலியவற்றை மொத்தமாக வாங்கி, தயார் நிலையில் குழிகள் தோண்டி 1 மாதம் ஆறப்போட்டு தழை உரம் போட்டு நல்லமழை பெய்ததும் நட்டு பிறகு தேவைப்பட்டால் உயிர்த்தண்ணீர் விட்டு பயன்பெறலாம். நீரை சேமிக்க தென்னை நார்க்கழிவும் பாலிதீன்ஷீட் மல்ச்சிங் முறையும் உதவும்.மானாவாரியாக எந்த நிலத்திலும் வளர நிறைய மரவகைகள் உள்ளதால் சீரிய முயற்சி மூலம் வளங்குன்றா வேளாண் உத்தி மூலம் நல்ல லாபம் பெற இன்றே திட்டமிடும்படி டாக்டர் பா.இளங்கோவன் தெரிவித்தார். 98420 07125 என்ற எண்ணில் இது குறித்து விபரம் பெறலாம்.