உள்ளூர் செய்திகள்

வாழ வைக்கும் வாழை இலை

வாழை சாகுபடிக்கு உகந்த சூழல் உள்ள ஊர்களில் வாழை இலைக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. குறைந்த பரப்பில் அதிக கன்றுகள் நட்டு லாபம் ஈட்ட உதவும். இலை வாழை சாகுபடி செய்தால் திருட்டு பயம் மற்றும் புயல் அபாயம் இல்லை. எனவே, காற்றுக்கு பயந்து வாழை சாகுபடி செய்ய வாய்ப்புடைய பெரிய விவசாயிகள், அதிக பராமரிப்பு செலவு, உரச்செலவு செய்யாமலே (நீர், மண் வசதி இருந்தால்) வெகு வேகமாக வளரும் இலை வாழை மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.பூவன், மொந்தன்: வாழை கன்று நட்டு ஏழாம் மாதம் முதல் தொடர்ந்து 24 மாதம் வரை தொடர்ச்சியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் இலைகளை அறுவடை செய்து பயன் பெறலாம். பொதுவாக பூவன் எனும் மஞ்சள் வாழை இலைக்கு மவுசு அதிகம். இது மென்மையாக, எளிதில் கிழியாததாக தொலைதுாரம் எடுத்து செல்ல ஏற்றதாக உள்ளது. அடுத்ததாக கற்பூர வல்லி மற்றும் மொந்தன் வகைகளும் பயன்படும். இலைக்காக நடும் போது 4.5 அடி இடைவெளியில் வரிசைக்கு வரிசை 4.5 அடி விட்டு நட்டு 2,150 கன்றுகள் மூலம் மரம் ஒன்றுக்கு சுமார் 36 இலைகள் 8 முதல் 9 மாதத்தில் உற்பத்தியாகின்றன.தலை வாழை இலை: ஒரு இலையின் நீளம் சுமார் 4 முதல் 5.5 அடி மற்றும் அகலம் 1.50 அடி முதல் 2.50 அடி வரை உள்ளது. ஒரு மரத்துக்கு 4 பக்கக்கன்றுகள் பராமரிக்க வேண்டும். ஒரு இலை உற்பத்தியாக 7 முதல் 15 நாட்கள் ஆகின்றது. 2,150 கன்றுகள் 36 வீதம் 77,400 இலைகள் கிடைப்பதுடன் பக்க கன்றுகள் 8,600 மூலம் தலா 36 இலைகள் வீதம் மூன்று லட்சத்து ஒன்பதாயிரத்து 600 தலை வாழை இலைகள் பெறலாம். இதன் மூலம் மொத்தம் 8 முதல் 9 மாதத்தில் மூன்று லட்சத்து 87 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இலை ஒன்று தலா 5 ரூபாய்க்கு விற்றால் ஒரு ஏக்கரில் 19 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.இதற்கு அவசியம் கிழங்கு நேர்த்தி, வேலியில் அடர்ந்த முள் இல்லா மூங்கில் நடுதல், நுாற்புழு முன் தடுப்பு, கன்றுக்கு யூரியா தலா 100 கிராம் வீதம் மூன்றாம் மாதம், ஒன்பதாம் மாதம், 15ம் மாதம் தருவது, தொழு உரம் அல்லது மண்புழு உரம் 10 கிலோ இடுவது அவசியம். தொடர்புக்கு 98420 07125.- முனைவர் பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !