உள்ளூர் செய்திகள்

பயிர்களின் நீர்த்தேவையை கணக்கிடுதல்

இன்று உலகம் முழுவதும் தண்ணீரை சிக்கனமாய் பயன்படுத்துகின்றனர், மழை நீரை வீடுகளில் சேகரித்தல், அணைகள் கட்டுதல், நிலத்தடி நீரை உயர்த்த ஏரி, குளம், கண்மாய், ஊரணி, பண்ணைக் குட்டை அமைத்தல், சொட்டு நீர் பாசனம் என பல நடவடிக்கைகளை எடுத்து நீரை சரியாய் பயன்படுத்துகின்றனர். இஸ்ரேல் போன்ற நாடுகளில் பனி நீரை சேகரித்து செடிகளுக்கு வழங்கும் வகையில் சிறு கருவிகளை அமைக்கின்றனர். குறைந்த நீரை கொண்டு அதிக விவசாயம் செய்கின்றனர். கழிவுநீரை, கடல் நீரை பல நாடுகளில் சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.ஆனால் நம் நாட்டில் பலர் குறிப்பாக விவசாயிகள் நீரின் சிக்கனத்தை கடைப்பிடிப்பதில்லை. இலவச மின்சாரம் கிடைப்பதால் அதிக நீரை கிணறு, போர்களில் இருந்து எடுத்து பயன்படுத்துகின்றனர். வீணடிக்கின்றனர். எனவே நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு போய் விட்டது. சீனா போன்ற நாடுகளில் அனைத்து நதிகளையும் இணைத்துவிட்டனர். அருகில் உள்ள ஆந்திராவில் நதிகளை இணைக்க திட்டமிட்டு சில நதிகளை இணைத்து விட்டனர்.ஒவ்வொரு பயிருக்கும் நீர்த்தேவை மாறுபடும். நீர் தேவை தட்ப வெப்ப நிலையை பொறுத்தும், பருவத்திற்கு ஏற்பவும் மாறும். குறைவாக நீர் விட்டால் விளைச்சல் பாதிக்கும். அப்பகுதி தட்பவெப்ப நிலை, சூரிய ஒளி, காற்று, ஈரப்பதம், மண், நீர் தாங்கு திறன், கிடைக்கும் மழை நீர், நீராவிப் போக்கு இவை பொறுத்து நீர்த்தேவை மாறும். எனவே தான் பலநாடுகளில் சொட்டு நீர்ப்பாசனம் தரும் முன் நாள் ஒன்றுக்கு நீராவி போக்கு, பயிர்களின் வளர்ச்சி விகிதம், ஒவ்வொரு பயிருக்குமான இடைவெளி, இவற்றை கொண்டு மாறும். சொட்டு நீர் பாசனம் மூலம் நீர்த்தேவை மிகவும்குறைவு. உதாரணத்துக்கு தென்னைக்கு சொட்டுநீர்தேவை 75 முதல் 100 லிட்டர். நீர்பாய்ச்சினால் 200 முதல் 300 லிட்டர் தினமும் தேவை. சொட்டு நீர் பாசன முறைக்கு மானியமும் உண்டு.- எம்.ஞானசேகர்விவசாய ஆலோசகர், சென்னை93807 55629


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !