உள்ளூர் செய்திகள்

நெல் பயிர்களில் குலை நோய் கட்டுப்படுத்தும் முறைகள்

சில நாட்களாக மேக மூட்டத்துடன் கூடிய வானிலை, காலை குளிர் காரணமாக அதிகாலை வேளையில் நெற்பயிர்களில் இலைகளில் பனித்துளி அல்லது நீர்திவளைகள் படிந்து குலை நோய் ஏற்பட்டிருக்கும்.டீலக்ஸ் பொன்னி எனப்படும் பி.பி.டி., 5204, பால் ஒட்டு எனப்படும் அம்பை 16, ஏ.டி.டி., 43 ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளவர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தழைச்சத்து உரங்களான யூரியா, அமோனியம் குளோரைடு, டி.ஏ.பி., அதிக அளவில் பயன்படுத்தினால் குலை நோய் ஏற்படும்.குலை நோய் முதலில் கண் வடிவப் புள்ளிகளாக தோன்றும். புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும், ஓரம் பழுப்பு நிறமாகவும் இருக்கும். விரைவில் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலை முழுவதும் பரவி இலை கருகி விடும். தீவிரத் தாக்குதலுக்கு உள்ளான பயிர் தீப்பிடித்து கருகியது போன்று காணப்படும். கதிர் காம்புப் பகுதியில் கருப்பு நிற புள்ளி தோன்றி அழுகி கதிர் குலை முறிந்து தொங்கும். நெல் மணி பதராகி விடும்.குலை நோயை தடுக்கும் முறைகள்குலை நோய் வரும் முன் தவிர்க்க சூடோமோனஸ் 0.2 சதம் கரைசலை (லிட்டருக்கு இரண்டு கிராம் அல்லது எக்டேருக்கு இரண்டரை கிலோ) நடவு செய்த 45 - 19 நாள் நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். குலை நோய் தோன்றிய பின் தழைச்சத்து கொண்ட உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். நோயைக் கட்டுப்படுத்த கீழே கூறப்பட்ட மருந்தினை தெளித்தபின் தான் தழைச்சத்து இட வேண்டும். அப்படி இடும் போது வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். தேவையான தழைச்சத்து பிரித்து இரண்டு, மூன்று முறைகள் இட வேண்டும்.குலைநோயினைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு கார்பன்டசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 75 டபிள்யூ.பி.,500 கிராம் வீதம் பயிர் முழுவதும் படும்படி தெளிக்க வேண்டும். மருந்துக் கரைசலில் சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால் அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி இலைகளில் தெளித்து வந்தால் குலை நோய் கட்டுப்படும்.- ம.குணசேகரன், தலைவர்பருத்தி ஆராய்ச்சி நிலையம்ஸ்ரீவில்லிபுத்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !